[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மத்திய அரசு நல்லது செய்தால் அதை ஆதரிப்போம்; மக்களுக்கு எதிராக எது இருந்தாலும் அதை எதிர்ப்போம் - அமைச்சர் காமராஜ்
  • BREAKING-NEWS மேற்குவங்கத்தில் குடியுரிமை திருத்த சட்டம், குடிமக்கள் பதிவேடு முறை அமல்படுத்தப்படாது; இதற்கு எதிராக யாரும் வன்முறையில் ஈடுபட வேண்டாம் - முதல்வர் மம்தா பானர்ஜி
  • BREAKING-NEWS மு.க.ஸ்டாலினை சந்தித்து தனக்கு வழங்கப்பட்ட சிறந்த நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருக்கான விருதை காண்பித்து வாழ்த்துப்பெற்றார் திருச்சி சிவா
  • BREAKING-NEWS எனது விளக்கத்தை ஏற்று என்னை அன்புடன் நலம் விசாரித்து வழியனுப்பிய கமலுக்கு நன்றி - ராகவா லாரன்ஸ்
  • BREAKING-NEWS என் பெயர் ராகுல் காந்தி; ராகுல் சவார்கர் அல்ல; உண்மையை பேசியதற்காக நான் ஒருபோதும் மன்னிப்பு கேட்க மாட்டேன் - ராகுல் காந்தி
  • BREAKING-NEWS நாட்டுக்காக மக்கள் குரல் எழுப்பாமல் அமைதியாக இருந்தால் அரசியலமைப்பு அழிக்கப்படும் - பிரியங்கா காந்தி
  • BREAKING-NEWS வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் 20ஆம் தேதிக்கு பின் கனமழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

கல்லாதோருக்கு அடிப்படை எழுத்தறிவு வழங்கத் திட்டம் - பள்ளிக்கல்வித்துறை

school-education-department-decide-to-teach-writing-knowledge-less-people

அடிப்படை எழுத்தறிவு இல்லாதவர்களுக்கு எழுத்தறிவு வழங்க புதிய திட்டத்தை பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் 1 லட்சத்து 68 ஆயிரத்து 716 பேருக்கு எழுத்தறிவு வழங்க பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி கல்லாதோர் எண்ணிக்கை கண்டறியப்பட்டிருந்தாலும், கல்லாதோர் எனக் கண்டறிய தேர்வொன்றை நடத்த வேண்டும் என பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. 

100 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும் தேர்வில் 20 சதவிகிதத்திற்கும் குறைவான மதிப்பெண் பெற்றவர்களை சிறப்பு மையங்களில் சேர்க்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது. இரு மாவட்டங்களிலும் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கல்லாதோருக்கான சிறப்பு மையங்கள் தனி நிதி உதவியுடன் செயல்படும். 

2019லிருந்து 2021ஆம் ஆண்டுவரை இந்த சிறப்பு வகுப்புகள் நடத்தப்படும். ஒரு பிரிவில் 15 வயதிற்கு மேற்பட்ட 40 பேர் வீதம், 4 கட்டங்களாக வகுப்புகளை நடத்த பள்ளிக் கல்வித்துறை அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 6 மாதப் படிப்பிற்கு பின்னர் 100 மதிப்பெண்களுக்கு தேர்வு நடத்தப்பட்டு, அவர்கள் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் கிரேட் முறையில் சான்றிதழ் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close