[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது அதிமுக
  • BREAKING-NEWS ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினி உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல்
  • BREAKING-NEWS சென்னை ஐஐடியில் மாணவர்களின் தற்கொலைகள் குறித்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரிய மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது
  • BREAKING-NEWS ராகுல்காந்தி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தேர்தல் ஆணையத்தில் பாஜக சார்பில் ஸ்மிருதி இரானி புகார் மனு
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கியது மாநில தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தெர்தலில் மதிமுகவிற்கு பம்பரம் சின்னம் ஒதுக்கியது மாநில தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS தமிழகத்தை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி சோமநாதன் மத்திய நிதி அமைச்சக செயலாளராக நியமனம்

கோவில்பட்டி சென்னை சில்க்ஸ் கடையில் தீ விபத்து

fire-broke-out-in-kovilpatti-chennai-silks-shop

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் ‌உள்ள சென்னை சில்க்ஸ் ஜவுளிக் கடையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. பல கோடி ரூபாய் மதிப்பிலான துணிகள் எரிந்து சேதமாயின.

Image result for chennai silks kovilpatti

கோவில்பட்டி சென்னை சில்க்ஸ் 3 தளங்களில் இயங்கி வருகிறது. இந்தக் கடையில் அதிகாலை திடீரென பிடித்தத் தீ, கொழழுந்து விட்டு எரிந்தது. இதுகுறித்து தகவல் அறிந்து கோவில்பட்டி, விளாத்திக்குளம், கழுகுமலை ஆகிய பகுதிகளிலிருந்து தீயணைப்பு வாகனங்களில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்‌து, தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதிகாலையில் கடை பூட்டியிருந்த போது தீ விபத்து ஏற்பட்டதால், ‌உயிர் சேதம் ‌தவிர்க்கப்பட்டது. 

Image result for chennai silks kovilpatti

இருப்பினும், பல கோடி ரூபாய் மதிப்பிலான துணிகள் தீயில் கருகி சேதமாயின. தீயணைப்பு பணி தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், சேதம் மேலும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர், தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கெனவே கடந்த 2017 ஆம் ஆண்டு சென்னை தியாகராயா நகரில் உள்ள சென்னை சில்க்ஸ் ஜவுளிக் கடையிலும், தீ வி‌பத்து ஏற்பட்டது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close