[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இரண்டாவது டி20 போட்டியில், 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றது
  • BREAKING-NEWS தமிழகத்தில் வெங்காய விளைச்சல் நன்றாக உள்ளதால் 20 நாட்களில் விலை குறையும் - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக நீதிமன்றத்தை நாட திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம்
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடவில்லை - கமல்ஹாசன்
  • BREAKING-NEWS தமிழகத்தில் மேலும் 4 மருத்துவக் கல்லூரிகள் அமைக்க அனுமதி கோரி மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் - அமைச்சர் விஜயபாஸ்கர்
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலில் யாருக்கும் ரஜினி ஆதரவில்லை- ரஜினி மக்கள் மன்றம் அறிக்கை
  • BREAKING-NEWS கடலோர மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

தீபாவளிக்காக ‘5 பைசா’ பிரியாணி - அலைமோதிய மக்கள் கூட்டம்

5-paisa-briyani-for-diwali-crowd-in-front-of-hotel-in-aruppukottai

அருப்புக்கோட்டையில் தீபாவளியை முன்னிட்டு பழைய 5 பைசா நாணயத்திற்கு பிரியாணி வழங்கிய, தனியார் பிரியாணி கடை உணவகத்தில் மக்கள் கூட்டம் குவிந்தது.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் இயங்கி வரும் தனியார் உணவகத்தில்  தீபாவளியை முன்னிட்டு பழைய 5 பைசாவிற்கு பிரியாணி வழங்கப்படும் என விளம்பரம் செய்யப்பட்டிருந்தது. இந்த விளம்பரத்தை கண்ட அருப்புக்கோட்டை பகுதி மக்கள் தங்கள் வீடுகளில் வைத்திருந்த பழைய 5 பைசா நாணயத்தை தேடிப்பிடித்து கொண்டு வந்தனர். 

அத்துடன் கூட்டமாக வந்து பிரியாணியை வாங்கி சென்றனர். பெண்கள், ஆண்கள் என ஏராளமானோர் வரிசையில் காத்திருந்து, பிரியாணியை வாங்கிச் சென்றதால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

சில முதியவர்கள் கூறும் போது, ஒரு காலத்தில் 5 பைசாவின் மதிப்பு ஒரு சாப்பிட்டின் மதிப்பாக இருந்ததாக கூறிச்சென்றனர். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close