[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தெலங்கானா போலீஸ் நீதியை நிலைநாட்டியிருக்கிறது - நடிகை நயன்தாரா
  • BREAKING-NEWS தமிழகத்தில் டிசம்பர் 27,30-ஆம் தேதிகளில் ஊரக உள்ளாட்சித் தேர்தல்
  • BREAKING-NEWS ஜிஎஸ்டியின் அடிப்படை வரி விகிதங்களை உயர்த்த மத்திய அரசு திட்டம்
  • BREAKING-NEWS 200 ரூபாயை தாண்டியது ஒரு கிலோ வெங்காயத்தின் விலை

சுர்ஜித் நலமுடன் மீண்டு வர பிரார்த்திக்கிறேன்: ரஜினிகாந்த்

i-pray-for-child-surjith-rajinikanth

குழந்தை சுர்ஜித், உயிருடன் நலமுடன் மீண்டு வர ஆண்டவனிடம் பிரார்த்திக்கிறேன் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார். 

தீபாவளியை முன்னிட்டு நடிகர் ரஜினிகாந்தின் வீட்டின் முன், இன்று காலை ரசிகர்கள்  கூடினர். அப்போது வெளியே வந்த ரஜினிகாந்த், ரசிகர்களுக்கு தீபாவளி வாழ்த்துக்களைத் தெரிவித்தார். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த குழந்தை சுர்ஜித் பற்றிக் கேட்கப்பட்டது. அப்போது பேசிய அவர், ‘சுர்ஜித் உயிருடன், நலமுடன் மீண்டு வரவேண்டுமென ஆண்டவனிடம் பிரார்த்திக்கிறேன்.

குழந்தைகளை பாதுகாப்பதில் பெற்றோரும் கவனமுடன் இருக்க வேண்டும். ஆழ்துளை கிணறுகள் குறித்து முன்னெச் சரிக்கை நடவடிக்கை எடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். குழந்தையை மீட்க அரசும், அதிகாரிகளும் முயற்சித்து வருகிறார்கள். அதனால் அவர்களை குறை சொல்ல முடியாது’’ என்றார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close