[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கோவையில் இளம்பெண் விபத்தில் சிக்கிய இடத்தில் கொடிக்கம்பம் ஏதும் இல்லை - உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம்
  • BREAKING-NEWS எஸ்பிஜி பாதுகாப்பை விலக்கிக் கொள்ளும் மசோதாவை தாக்கல் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல்
  • BREAKING-NEWS இந்தியாவிலேயே அதிக மருத்துவர்கள் கொண்ட மாநிலங்களில் தமிழகம் 2வது இடம்; மகாராஷ்டிரா முதல் இடம் - மத்திய அரசு
  • BREAKING-NEWS சிவசேனா, தேசியவாத காங்., காங்கிரஸ் இணைந்து மகாராஷ்டிராவில் ஆட்சியமைத்தாலும் நிலைக்காது - நிதின் கட்கரி
  • BREAKING-NEWS இடஒதுக்கீடு விவரங்கள் கொண்ட வெள்ளை அறிக்கையை நாடாளுமன்ற நடப்பு கூட்டத்தொடரில் பிரதமர் தாக்கல் செய்ய வேண்டும் - மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS நெல்லையில் இருந்து பிரித்து தென்காசி மாவட்டத்தை உருவாக்கும் அரசாணையை ரத்து செய்யக்கோரிய மனு தள்ளுபடி - உயர்நீதிமன்ற கிளை
  • BREAKING-NEWS கோயில் நிலங்களில் 5 ஆண்டுகளுக்கு மேல் வசிப்போருக்கு பட்டா வழங்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் இடைக்காலத்தடை

லைசென்ஸ் சோதனைக்கு பெண்கள் ஜீன்ஸ் அணிந்து வரக்கூடாதா? - அதிகாரிகள் விளக்கம்

no-dress-code-but-take-safety-and-decency-into-account-says-rto-officals

சென்னை கேகே நகர் ஆர்டிஓ அலுவலகத்தில் பெண் ஒருவர் வாகன ஓட்டுநர் உரிமம் எடுக்க சென்றுள்ளார். அப்போது அவர் ஜீன்ஸ் பேன்ட் மற்றும் ஸ்லீவ்லஸ் டாப் உடை அணிந்து சென்றுள்ளார். ஓட்டுநர் உரிமத்திற்கான சோதனைக்கு சென்ற போது அப்பெண்ணை இந்த உடையுடன் சோதனையில் ஈடுபடக் கூடாது என்று ஆர்டிஓ அதிகாரி தடுத்துள்ளதாக தெரிகிறது. இதனைத் தொடர்ந்து அந்தப் பெண் மீண்டும் வீடு திரும்பி அந்தப் பெண் தனது உடையை மாற்றி வந்து ஓட்டுநர் உரிம சோதனையில் பங்கேற்று உள்ளார் எனக் கூறப்படுகிறது.

இது தொடர்பாக அந்தப் பெண் ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ நாளிதழக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், “நான் ஜீன்ஸ் மற்றும் டாப்ஸ் அணிந்து இருந்ததால் ஓட்டுநர் உரிமம் சோதனையில் பங்கேற்க ஆர்டிஓ அதிகாரி அனுமதிக்கவில்லை. எனவே நான் மீண்டும் வீட்டிற்கு சென்று சல்வார் கமீஸ் உடை அணிந்து வந்து ஓட்டுநர் உரிமம் சோதனையில் பங்கேற்றேன்” எனத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக ஆர்டிஐ அதிகாரிகள் சிலர் விளக்கம் அளித்துள்ளனர். அதில், “ ஓட்டுநர் உரிமம் சோதனைக்கு எந்தவித உடை கட்டுபாடும் கிடையாது. ஓட்டுநர் உரிமம் எடுக்க வந்த எந்த பெண்ணும் திரும்பி அனுப்பப்படவில்லை. நாங்கள் சரியான உடை அணிந்து வாருங்கள் என்ற அறிவுறுத்தலையே அளித்தோம். அதுவும் வாகனம் ஓட்டுபவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டே இந்த அறிவுறுத்தலும் அளிக்கப்பட்டது” எனத் தெரிவித்துள்ளனர். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close