[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தென்பெண்ணையாற்றின் குறுக்கே கர்நாடகா அணை கட்டத் தடையில்லை என உச்சநீதிமன்றம் தீர்ப்பு
  • BREAKING-NEWS பிரதமர் மோடியை விமர்சித்ததாக ராகுல்காந்திக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு முடித்து வைப்பு
  • BREAKING-NEWS ரஃபேல் கொள்முதலில் ஊழல் நடைபெறவில்லை என்ற தீர்ப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனு தள்ளுபடி
  • BREAKING-NEWS சபரிமலை வழக்கு 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்ற பரிந்துரை செய்தது உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS மு.க.ஸ்டாலின் மிசா சட்டத்தின் கீழ் கைதாகவில்லை என நான் கூறவில்லை - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்
  • BREAKING-NEWS மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலானதை எதிர்க்கட்சிகள் அரசியலாக்குகின்றன - உள்துறை அமைச்சர் அமித்ஷா
  • BREAKING-NEWS சென்னை ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் மரணம் குறித்து சிபிசிஐடி விசாரிக்க வேண்டும்; சாதி, மத ரீதியிலான பாரபட்சம் காட்டிய பேராசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஜவாஹிருல்லா

தாயை கொன்ற கொடூர மகன் - ஆயுள் தண்டனை விதித்த நீதிமன்றம்

madras-high-court-order-life-punishment-for-chennai-youth-who-killed-his-mother

தாயை கத்தியால் குத்தி எரித்து கொன்ற மகனுக்கு ஆயுள் தண்டனையும், 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்தவர் அமர்நாத். இவர் தனது தாயார் சசிகலாவுடன் வசித்து வந்தார். குடிப்பழக்கம் உள்ள இவர், அடிக்கடி பணம் கேட்டும், தனக்கு திருமணம் செய்து வைக்கும்படியும் தாயாரை தொந்தரவு செய்து வந்துள்ளார். கடந்த 2016 மே மாதம் அமர்நாத்துக்கும் அவரது தாயாருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. 

அந்த தகராரின் போது அமர்நாத் தனது தாயாரை கத்தியால் குத்தியுள்ளார். பின்னர், தாயார் சசிகலா மீது மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்தார். இதில், சசிகலா இறந்து போனார். இதுகுறித்து அரும்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அமர்நாத்தை கைது செய்தனர். இந்த வழக்கின் விசாரணை சென்னை மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

          

இந்நிலையில், நீதிபதி மஞ்சுளா முன்பு இன்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, அமர்நாத் மீது சந்தேகத்துக்கு இடமின்றி குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி அவருக்கு ஆயுள்தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close