திருடர்களில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பாணியைப் பின்பற்றுவார்கள். கடலூர் மாவட்டத்தில் உடம்பில் ஒட்டுத்துணி இல்லாமல் சென்று திருட முயன்ற ஒருவர், மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளார்.
விருத்தாசலம் வி.என்.ஆர். நகரில் உள்ள ஜமால் பாஷா தெருவில், வீடுகளில் ஜன்னல் ஓரம் வைக்கப்பட்டிருக்கும் பொருட்கள் அடிக்கடி மாயமாகின. பொருட்கள் எப்படி காணாமல் போகிறது என தெரியாமல், ஜமால் பாஷா தெருவில் வசிப்பவர்கள் குழப்பத்தில் இருந்தார்கள். திருடன் பிடிபடாத நிலையில், செல்போன், நகைகள், சின்னச்சின்ன பொருள்கள் என அவர்கள் தொடர்ந்து பறிகொடுத்தனர்.
இந்நிலையில், அதே வீதியில் வசிக்கும் ரம்ஜான் அலி என்பவரின் வீட்டில் திங்களன்று அதிகாலை ஏதோ சத்தம் கேட்டு அனைவரும் எழுந்தார்கள். யாரோ திருட முயன்றிருக்கிறர்கள் என உணர்ந்த ரம்ஜான் அலி, தனது வீட்டின் முன்பு பொருத்தியிருந்த சிசிடிவியின் உதவியை நாடினார். அதில் பதிவான காட்சிகளைப் பார்த்த அவர், விக்கித்துப் போனார். அதில், உடம்பில் ஒட்டுத் துணி கூட இல்லாத ஒரு நபர், கையில் பிளாஸ்டிக் பைப்புடன் வருவது பதிவாகியிருந்தது.
அதன் மூலம் வீட்டிலிருந்த பொருள்களை திருட முயன்றபோது, ரம்ஜான் அலியின் குடும்பத்தினர் தூக்கம் கலைந்ததும், அந்த "பப்பி ஷேம் திருடர்" சுவர் ஏறி தப்பிய காட்சிகளும் சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தன. அந்த விநோதத் திருடன் இன்னும் பிடிபடாததால், விருத்தாசலம் மக்கள் கொஞ்சம் அச்சத்தில்தான் இருக்கிறார்கள்.
‘பாலியல் வன்கொடுமை நடந்தபின் வா’ புகாரளிக்க வந்த பெண்ணை திருப்பி அனுப்பிய போலீசார்
டெல்லி தொழிற்சாலை தீ விபத்து: தலைமறைவாக இருந்த உரிமையாளர் கைது
"முத்துராமலிங்க தேவர் பெயரை சூட்ட ஓபிஎஸ், ஈபிஎஸ் தடையாக உள்ளனர்" சுப்ரமணியன் சுவாமி
உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் அறிவிப்பு
கர்ப்பிணி மனைவிக்காக நாற்காலியாக மாறிய கணவர் !