[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதலமைச்சர் பழனிசாமி
  • BREAKING-NEWS நாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS தொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை
  • BREAKING-NEWS தமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்
  • BREAKING-NEWS புரோ‌ கபடி லீக் தொடரில் பெங்கால் ‌வாரியர்ஸ் அணி ‌முதல் முறையாக சாம்பியன்‌. இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.

வடமாநில இளைஞர் ஓட ஓட விரட்டி குத்திக்கொலை: மதுரையில் பயங்கரம்!

north-indian-youth-murdered-in-madurai

மதுரையில் வடமாநில இளைஞர் ஓட ஓட விரட்டி குத்திக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மதுரை பெரியார் பேருந்துநிலையம் அடுத்துள்ள கென்னட் மருத்துவமனை அருகே ரயில்வே மேம்பாலத்தின் அடியில், வாலிபர் ஒருவரை ஓட ஓட விரட்டி, மர்மக் கும்பல் ஒன்று சரமாரி குத்திக் கொன்றது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதியினர் எஸ்.எஸ்.காலனி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து உடலை கைப்பற்றி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

கொல்லப்பட்டு கிடந்தவரின் அருகில் பட்டா கத்தி ஒன்றும் கஞ்சா பொட்டலங்களும் கிடந்ததாக போலீசார் தெரிவித்துள் ளனர்.

கொல்லப்பட்டவர் வடமாநிலத்தைச் சேர்ந்தவர் என்று தெரிகிறது. அவர் யார்  என்ற விவரம் தெரியவில்லை. வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆட்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில் நடந்த இந்தக் கொலைச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close