[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தோனேசியாவைத் தாக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம். 7.4 ரிக்டர் அளவில் தாக்கிய நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை விடுப்பு
  • BREAKING-NEWS கும்பகோணத்தில்‌ பாதாளச்சாக்கடையில் தவறி விழுந்து தொழிலாளி உயிரிழப்பு
  • BREAKING-NEWS பயங்கரவாதத்தால் ஆண்டுக்கு 70 லட்சம் கோடி ரூபாய் இழப்பு: பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு

“தமிழை ஆட்சிமொழியாக்கி பெருமைப்படுத்துங்கள்"- பிரதமர் மோடிக்கு ஸ்டாலின் வேண்டுகோள்

mk-stalin-request-to-pm-modi

இந்தியாவின் ஆட்சிமொழியாக தமிழை அறிவித்து பெருமைப்படுத்துங்கள் என பிரதமர் மோடிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ் மொழி மீது பிரதமர் மோடி காட்டும் ஆக்கப்பூர்வமான அக்கறையை, விரைவில் செயல்படுத்துவார் என நம்புவதாக குறிப்பிட்டுள்ளார். தமிழின் தொன்மை குறித்து பிரதமர் மோடி தெரிவிக்கும் கருத்துகளை உளமார வரவேற்றுப் பாராட்டுவதாகவும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். எனவே 8-ஆவது அட்டவணையின் அனைத்து மொழிகளையும் ஆட்சிமொழியாக்கும் நடவடிக்கையில் முதல்கட்டமாக தமிழை ஆட்சிமொழியாக்குங்கள் என ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close