[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இலங்கையில் 8வது அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தலில் 81.52% வாக்குகள் பதிவாகியுள்ளன
  • BREAKING-NEWS ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனத்தின் இயக்குநர் பொறுப்பில் இருந்து அனில் அம்பானி ராஜினாமா செய்தார்
  • BREAKING-NEWS கேரளா: மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடை திறப்பு
  • BREAKING-NEWS இலங்கை அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு
  • BREAKING-NEWS இலங்கை அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு: 4 மணி நேரத்தில் 50 சதவிகிதத்திற்கும் மேல் வாக்குகள் பதிவானதாக தகவல்
  • BREAKING-NEWS கோவாவில் மிக் ரக பயிற்சி விமானம் விழுந்து நொறுங்கியது: விமானிகள் இருவரும் பாதுகாப்பாக தப்பினர்
  • BREAKING-NEWS கனமழை காரணமாக நெல்லை நடுவக்குறிச்சி குளக்கரையில் பல இடங்களில் உடைப்பு

Go Back Modi மூலம் விளம்பரப்படுத்தியவர்களுக்கு நன்றி - ஹெச்.ராஜா 

hraja-tweets-about-go-back-modi-hashtag

Go Back Modi மூலம் பிரதமரின் வருகையை விளம்பரப்படுத்தியவர்களுக்கு நன்றி என ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்

ஐஐடி நிகழ்ச்சியில் பங்கேற்க இன்று காலை பிரதமர் மோடி சென்னை வந்தார். சென்னை விமான நிலையத்தில் அளிக்கப்பட்ட வரவேற்பை பெற்றுக்கொண்ட மோடி அங்கு கூடியிருந்த பாஜக தொண்டர்களிடையே உரையாற்றினார். பின்னர் ஹெலிகாப்டர் மூலம் சென்னை ஐஐடி சென்றார். அங்கு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர்,  இந்தியா - சிங்கப்பூர் ஹேக்கத்தான் போட்டியில் வென்றோருக்கு பரிசுகளை வழங்கினார். பின்னர் உரையாற்றிய மோடி தமிழர்களின் உணவு குறித்தும், விருந்தோம்பல் குறித்தும் பேசினார். பின்னர் சென்னை ஐஐடி மாணவ- மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.

இதற்கிடையே பிரதமரின் வருகைக்கு ஆதரவாகவும், எதிராகவும் ஹேஸ்டேக்குகள் ட்ரெண்ட் செய்யப்பட்டு வருகின்றன. #gobackmodi, #TNWelcomesModi ஆகிய ஹேஸ்டேக்குகள் இந்திய அளவில் ட்விட்டர் ட்ரெண்டிங்கில் உள்ளன. 

gobackmodi குறித்து ட்வீட் செய்துள்ள பாஜகவின் ஹெச்.ராஜா, ''Go Back Modi என்று மோடி ஜி  தமிழகம் வருவதை Trend செய்வதை பெருமிதமாக விளம்பரப்படுத்தியவர்களுக்கு நன்றி'' என நய்யாண்டியாக குறிப்பிட்டுள்ளார். மேலும் பிரதமர் மோடியை வரவேற்று மறைந்த பத்திரிகையாளர் சோ பேசிய பழைய வீடியோ ஒன்றையும் தன் பதிவில் ஹெச்.ராஜா இணைத்துள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close