[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தெலங்கானா போலீஸ் நீதியை நிலைநாட்டியிருக்கிறது - நடிகை நயன்தாரா
  • BREAKING-NEWS தமிழகத்தில் டிசம்பர் 27,30-ஆம் தேதிகளில் ஊரக உள்ளாட்சித் தேர்தல்
  • BREAKING-NEWS ஜிஎஸ்டியின் அடிப்படை வரி விகிதங்களை உயர்த்த மத்திய அரசு திட்டம்
  • BREAKING-NEWS 200 ரூபாயை தாண்டியது ஒரு கிலோ வெங்காயத்தின் விலை

உள்ளாட்சித் தேர்தல் சின்னம் ஒதுக்கீடு குறித்து தமிழக அரசு அரசாணை

tn-govt-go-about-local-body-election

உள்ளாட்சித் தேர்தல் சின்னம் ஒதுக்கீடு மற்றும் முன்பதிவு குறித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் நவம்பர் மாதத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான பணிகள் நடைபெற்று வரும் நிலையில், கட்சிகள் தங்களுக்கான சின்னங்களை கோரி விண்ணப்பிப்பதற்கான விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. இதே போல் உள்ளாட்சித்தேர்தலில் பயன்படுத்துவதற்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை மாவட்டங்களுக்கு அனுப்பும் பணி தொடங்கியுள்ளது.

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேவை என மாநிலத் தேர்தல் ஆணையம் கேட்டிருந்தது. அதனடிப்படையில், இந்தியத் தேர்தல் ஆணையம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை மாநிலத் தேர்தல் ஆணையத்திற்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் இருந்து மற்ற இடங்களுக்கு அனுப்பி வைக்கும் பணி தற்போது தொடங்கியுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close