[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது அதிமுக
  • BREAKING-NEWS ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினி உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல்
  • BREAKING-NEWS சென்னை ஐஐடியில் மாணவர்களின் தற்கொலைகள் குறித்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரிய மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது
  • BREAKING-NEWS ராகுல்காந்தி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தேர்தல் ஆணையத்தில் பாஜக சார்பில் ஸ்மிருதி இரானி புகார் மனு
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கியது மாநில தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தெர்தலில் மதிமுகவிற்கு பம்பரம் சின்னம் ஒதுக்கியது மாநில தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS தமிழகத்தை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி சோமநாதன் மத்திய நிதி அமைச்சக செயலாளராக நியமனம்

‘தாதா’ மணிகண்டன் என்கவுன்டரில் கொல்லப்பட்டது எப்படி..?

how-manikandan-encounter-happened

உதவி ஆய்வாளரை பட்டாகத்தியால் வெட்டியதால், காவல்துறையின் துப்பாக்கி குண்டுகளுக்கு பலியாகியிருக்கிறார், தாதா மணிகண்டன் என்ற ரவுடி. யார் இவர்? தாதா என அழைக்கும் அளவுக்கு இவர் வளர்ந்தது எப்படி? 

விழுப்புரம் மாவட்டம் வானூரை அடுத்த குயிலாப்பாளையத்தில் பிறந்தவர் மணிகண்டன். அடிதடி, கட்டபஞ்சாயத்து என சிறுசிறு சம்பவங்களை செய்து, ரவுடியாக உருவெடுத்த மணிகண்டன், ஊருக்குள் செல்வாக்காக வலம் வரத் தொடங்கியிருக்கிறார். தொழிலில் படிப்படியாக வளர்ந்த மணிகண்டன், தனக்கென ஒரு கும்பலை உருவாக்கிக் கொண்டார். அந்தக் கும்பலை வைத்து, ஆள்கடத்தல், மாமூல் வசூலித்தல், கொலைகள் என, குற்றப்பதிவேட்டில் பக்கம் பக்கமாக எழுதும் அளவிற்கு பல சம்பவங்களை செய்தார் என, மணிகண்டன் மீது குற்றச்சாட்டுகிறது காவல்துறை.

பழிக்குப் பழியாக பல சம்பவங்களை செய்து பரபரப்பாக பேசப்பட்டதால், மணிகண்டனுக்கு, ரவுடிகள் மத்தியில் தாதா மணிகண்டன் என்ற அடைமொழியும் கிடைத்திருக்கிறது. அவரின் இந்த வளர்ச்சி, விழுப்புரத்தை கட்டுப்பாட்டில் வைத்திருந்ததாக கூறப்பட்ட ரவுடி பூபாலுனுக்கு இடையூறை ஏற்படுத்தி இருக்கிறது. அதனால், பூபாலனின் கூட்டாளியான ராஜ்குமாருக்கும், மணிகண்டனின் கும்பலுக்கு இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்திருக்கிறது.

இவ்விரு கும்பலுக்கு இடையே நடந்த கோஷ்டி பூசல், இரு தரப்பிலும் 21 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்ற அதிர்ச்சித் தகவல்களைக் கூறுகிறது காவல்துறை. ஆரோவில், செஞ்சி, மயிலம், திருக்கோவிலூர், கோட்டக்குப்பம், கிளியனுார், வானூர் உள்ளிட்ட காவல்நிலையங்களில், கொலை, கொலை மிரட்டல் உள்ளிட்ட 28 வழக்குகளில், தாதா மணிகண்டன் முக்கிய குற்றவாளி ஆவார்.

என்கவுன்டர் நடந்தது எப்படி..?

பல்வேறு குற்ற வழக்குகளுடன் 2018 ஆம் ஆண்டு ரிலையன்ஸ் பாபு என்பவர் கொலை வழக்கில் 'தாதா' மணிகண்டனை தீவிரமாக தேடி வந்த விழுப்புரம் காவல்துறை, சென்னையில் அவர் குடும்பத்துடன் தலைமறைவாக இருந்ததை அறிந்தனர். அதுமட்டுமின்றி, அவர் வெளிநாடு தப்பிச் செல்ல திட்டமிட்டிருந்ததும் தெரியவந்தது. தகவல் உறுதி செய்யப்பட்டதை அடுத்து, ஆரோவில் காவல்நிலைய உதவி ஆய்வாளர் பிரபு, தனிப்படை உதவி ஆய்வாளர் பிரகாஷும், 4 காவலர்களுடன் அண்ணாநகருக்கு விரைந்தனர்.

ஆள்நடமாட்டம் குறைந்ததும் தாதா மணிகண்டன் தங்கியிருந்த வீடு சுற்றி வளைக்கப்பட்டது. உதவி ஆய்வாளர்கள் இருவர் அதிரடியாக வீட்டினுள் நுழைந்தனர். இதைக் கண்டு அதிர்ந்துபோன மணிகண்டன், அங்கிருந்து தப்ப முயன்றார். அவரைத் தடுத்து நிறுத்திய உதவி ஆய்வாளர் பிரபு, சரணடையுமாறு எச்சரித்திருக்கிறார். 

ஆனால், மணிகண்டன் அதை கேட்கவில்லை. அருகிலிருந்த பட்டாகத்தியை எடுத்த அவர், எதிரில் நின்றிருந்த பிரபுவின் தலையில் வெட்டியிருக்கிறார். எதிர்பாராத தாக்குதலால் நிலைகுலைந்த உதவி ஆய்வாளர் பிரபு, தடுமாறி விழுந்தார். ஆக்ரோஷத்தில் இருந்த தாதா மணிகண்டன், மீண்டும் பிரபுவை வெட்ட முயற்சித்ததாக கூறப்படுகிறது. இதைக் கண்டு பதற்றமடைந்த உதவி ஆய்வாளர் பிரகாஷ், தனது துப்பாக்கியை எடுத்து, மணிகண்டனை நோக்கி சுடத் தொடங்கினார். துப்பாக்கியில் இருந்து சீறிப்பாய்ந்த 2 தோட்டாக்கள், மணிகண்டனை மார்பை துளைத்தன. ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த தாதா மணிகண்டனின் இறுதி மூச்சு அந்த இடத்திலேயே அடங்கிப்போனது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close