திருத்தணி அருகே மாநில நெடுஞ்சாலையில் கிடந்த மணிபர்ஸை, வங்கியின் தற்காலிக ஊழியர் மீட்டு போலீசில் ஒப்படைத்தார். அதில், 14,303 ரூபாய் மற்றும் ஏ.டி.எம். கார்டுகள் இருந்தன. போலீசார் உரியவரை தொடர்பு கொண்டு அதனை ஒப்படைத்தனர்.
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அடுத்த முருக்கம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெகன் (28). இவர் திருத்தணி பாரத ஸ்டேட் வங்கியில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வருகிறார். வங்கியின் பணி நிமித்தமாக நேற்று காரில் அத்திமாஞ்சேரி பேட்டையில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி கிளைக்கு ஜெகன் சென்றுக் கொண்டிருந்தார். அப்போது, திருத்தணி-சோளிங்கர் மாநில நெடுஞ்சாலை, தலையார்தாங்கல் பஸ் நிறுத்தம் அருகே ஒரு மணிபர்ஸ் சாலையில் கிடந்ததை கண்டு, காரை நிறுத்தி, அதனை எடுத்துள்ளார்.
அதில், 14,303 ரூபாய், வங்கிகளின் ஏ.டி.எம்.,கார்டுகள், ஆதார் கார்டு போன்ற முக்கிய ஆவணங்கள் இருந்துள்ளன. இதையடுத்து ஜெகன் அதனை திருத்தணி போலீஸ் எஸ்.ஐ., சரவணனிடம் ஒப்படைத்தார். பின்னர், மணிபர்ஸில் இருந்த விலாசம் மற்றும் மொபைல் நம்பரை தொடர்பு கொண்டபோது, அதை தொலைத்தவர், திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே.பேட்டை அடுத்த அம்மனேரி பகுதியைச் சேர்ந்த தன்ராஜ் என தெரியவந்தது.
இதனையடுத்து எஸ்.ஐ., சரவணன், தன்ராஜை நேரில் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து ஜெகன் முன்னிலையில் மணிபர்ஸை ஒப்படைத்தார். அதிலிருந்த பணம் மற்றும் கார்டுகள் சரியாக உள்ளது என போலீசார் மற்றும் வங்கி ஊழியருக்கு தன்ராஜ் நன்றி தெரிவித்தார். வங்கி தற்காலிக ஊழியரின் இந்தச் செயலை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.
‘பாலியல் வன்கொடுமை நடந்தபின் வா’ புகாரளிக்க வந்த பெண்ணை திருப்பி அனுப்பிய போலீசார்
டெல்லி தொழிற்சாலை தீ விபத்து: தலைமறைவாக இருந்த உரிமையாளர் கைது
"முத்துராமலிங்க தேவர் பெயரை சூட்ட ஓபிஎஸ், ஈபிஎஸ் தடையாக உள்ளனர்" சுப்ரமணியன் சுவாமி
உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் அறிவிப்பு
கர்ப்பிணி மனைவிக்காக நாற்காலியாக மாறிய கணவர் !