[X] Close
JUST IN
  • BREAKING-NEWS டாக்டர் எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில் முதல்வர் பழனிசாமிக்கு அக்டோபர் 20ம் தேதி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது
  • BREAKING-NEWS பொதுத்துறை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் 8.33%, கருணைத் தொகை 11.37% வழங்கப்படும் - தமிழக அரசு
  • BREAKING-NEWS ராஜீவ்காந்தி கொலை குறித்து சீமான் பேசியது தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் விரிவான அறிக்கை கேட்டுள்ளார் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ
  • BREAKING-NEWS நீட் ஆள்மாறாட்ட வழக்கில் மாணவர் இர்பானின் காவலை அக்டோபர் 25 வரை நீட்டித்தது தேனி நீதிமன்றம்

“மாணவர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்படும்” - மருத்துவக் கல்வி இயக்குநர்

first-year-medical-student-will-examine-says-medical-education-director

முதலாமாண்டு மருத்துவ மாணவர்கள் அனைவரின் சான்றிதழ்களும் சரிபார்க்கப்படும் என்று மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயணபாபு புதிய தலைமுறையிடம் தெரிவித்துள்ளார்.

தேனி மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த முதலாமாண்டு மாணவர் உதித் சூர்யா, நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாக புகார் எழுந்துள்ளது. புதிய தலைமுறையின் களஆய்வில் வெளியான இந்த விவகாரம் குறித்து கல்லூரி மற்றும் மருத்துவக் கல்வி இயக்குநரகம் அளித்த புகார் மீது காவல்துறை விசாரணை நடைபெற்று வருகிறது.

இதையடுத்து, முதலாம் ஆண்டு மருத்துவ மாணவர்கள் அனைவரது சான்றிதழையும் சரிபார்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதை மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயணபாபு புதிய தலைமுறையிடம் தெரிவித்துள்ளார். தமிழகத்தின் 23 மருத்துவக் கல்லூரிகளிலும் முதலாம் ஆண்டு மாணவர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் தொடர்பான புகாரில் தொடர்புடைய மாணவர் உதித் சூர்யாவைத் தேடி தேனியிலிருந்து சென்னை வந்த தனிப்படை, தனது விசாரணையை நடத்தி வருகிறது. மேலும், காசிமேடு, தண்டையார்பேட்டையில் குற்றச்சாட்டுக்கு ஆளான மாணவரின் தந்தை நடத்தி வரும் இரண்டு கிளினிக்குகளும் திறக்கப்படவில்லை.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close