[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இந்தியா, தென்னாப்ரிக்கா இடையே ராஞ்சியில் இன்று தொடங்குகிறது மூன்றாவது டெஸ்ட் போட்டி
  • BREAKING-NEWS பில்லூர் அணை நிரம்பியதால் பவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை. 7 மாவட்டங்களில் கனமழை தொடரும் என வானிலை மையம் தகவல்
  • BREAKING-NEWS நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் இன்று மாலையுடன் முடிகிறது பரப்புரை
  • BREAKING-NEWS நாங்குநேரி பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. சரவணகுமார் மீது வழக்குப்பதிவு

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று மழை பெய்ய வாய்ப்பு

chance-for-rain-in-tn-and-puducherry-today

வெப்பச் சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வெயில் வாட்டி வருகிறபோதிலும், அவ்வப்போது பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், வெப்பச் சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரில் இன்று மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு‌ மையம் கூறியுள்ளது.

குறிப்பாக திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், தஞ்சை, நாகை, கன்னியாகுமரி, கோவை, நீலகிரி மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், மாலை அல்லது இரவு நேரங்களில் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அடுத்த 2 வாரங்களுக்கு, கடலோர மாவட்டங்களில் மாலை அல்லது இரவு நேரங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் தேவாலாவில் 5 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close