[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 2 பிரமோஸ் ஏவுகணைகளை வெற்றிகரமாக சோதித்தது இந்தியா
  • BREAKING-NEWS 10, 11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கீடு. இரண்டரை மணி நேர தேர்வு மூன்று மணி நேரமாக அதிகரிப்பு
  • BREAKING-NEWS மேட்டூர் அணை நிரம்பி வருவதால், காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
  • BREAKING-NEWS தமிழகத்தில் 21 மாவட்டங்களில் மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

திண்டுக்கல் சீனிவாசன் இந்தோனேசியா பயணம்

minister-dindigul-srinivasan-visit-to-indonesia

தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், அரசு முறை பயணமாக இந்தோனேசியா புறப்பட்டுச் சென்றார்.

இந்தோனேசியா, தாய்லாந்து, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் அவர், அந்நாடுகளில் வன உயிரின பூங்காக்கள், சரணாலயங்கள் ஆகியவற்றை பார்வையிட உள்ளார். அங்கு வனத்துறையில் பின்பற்றப்படும் முறைகள், காட்டுத்தீ தடுப்பு முறைகள் ஆகியவற்றை அறிந்து கொண்டு தமிழகத்திலும் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தப் பயணத்தின் மூலம், சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவை உலகத்தரம் வாய்ந்ததாக மாற்ற மேற்கொள்ளப்பட உள்ள மேம்பாட்டுப் பணிகளை அறிந்து கொள்ள முடியும் என்றும் தமிழக வனத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close