[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மாநிலங்களவையிலும் நிறைவேறியது குடியுரிமை சட்டத் திருத்த மசோதா
  • BREAKING-NEWS காஷ்மீர் சட்டப்பிரிவு நீக்கம், முத்தலாக் போலவே குடியுரிமை மசோதாவும் இஸ்லாமியர்களுக்கு எதிரானதல்ல - உள்துறை அமைச்சர் அமித்ஷா
  • BREAKING-NEWS மக்களை சந்திக்க திமுக என்றுமே அஞ்சியதில்லை; நாங்கள் ஓடி ஒளியவும் இல்லை; மக்களை சந்திக்க திமுக எப்போதும் தயாராக உள்ளது - மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS குடியுரிமை சட்ட மசோதா இஸ்லாமியர்கள் உள்ளிட்ட எந்த சிறுபான்மையினருக்கும் எதிரானதல்ல - அமித்ஷா
  • BREAKING-NEWS வெளிநாட்டு இஸ்லாமியர்கள் இந்தியாவில் குடியுரிமை பெற வேறு சில சட்ட வாய்ப்புகள் உள்ளன - அமித்ஷா

எடப்பாடி டு லண்டன் - கோட், சூட் உடையில் முதல்வர் பழனிசாமி 

palanisamy-met-with-industry-representatives-in-london

லண்டனில் தொழில்துறைப் பிரதிநிதிகளை சந்தித்த முதல்வர் பழனிசாமி சுகாதாரத் துறை சார்ந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார்.

தமிழக தொழில்துறையில் புதிய முதலீடுகளைக் கவரும் நோக்கில் இங்கிலாந்து, அமெரிக்கா, துபாய் நாடுகளுக்கு முதல்வர் பழனிசாமி சுற்றுப் பயணம் தொடங்கியுள்ளார். சென்னையில் இருந்து விமானம் மூலம் இங்கிலாந்து சென்று சேர்ந்த அவரை இங்கிலாந்து வாழ் தமிழர்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். 

லண்டனில் தொழில்துறைப் பிரதிநிதிகளை சந்தித்த முதல்வர் பழனிசாமி சுகாதாரத் துறை சார்ந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார். அந்தச் சந்திப்பின் போது கோட், சூட் அணிந்து முற்றிலும் புதிய தோற்றத்தில் முதலமைச்சர் பழனிசாமி இருந்தார். 

3 நாட்கள் இங்கிலாந்தில் தங்கியிருக்கும் முதல்வர், அடுத்த மாதம் 2ஆம் தேதி அமெரிக்கா செல்லவுள்ளார். அங்கு நியூயார்க், சான் பிரான்சிஸ்கோ நகர்களுக்கு சென்று அமெரிக்க முதலீட்டாளர்களைச் சந்தித்து தமிழ்நாட்டில் முதலீடு செய்ய வருமாறு அழைப்பு விடுக்கவுள்ளார். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close