[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 2 நாட்களில் ஹெல்மெட் அணியாமல் பிடிபட்டவர்கள் ஒரு லட்சம் பேர் - டிஜிபி அலுவலகம்
  • BREAKING-NEWS “கன்னடம்தான் முக்கியத்துவம் வாய்ந்த மொழி” - எடியூரப்பா
  • BREAKING-NEWS இந்தியக் கடற்படையின் கப்பல்தளத்தில் அப்ரண்டிஸ் பணி
  • BREAKING-NEWS “ஒரு மொழியை திணித்தால் ஏற்க மாட்டோம்”- கமல்ஹாசன்

சென்னையில் பிற்பகல் வரை மழைக்கு வாய்ப்பு

chance-for-rain-in-chennai

சென்னையில் பிற்பகல் வரை விட்டு விட்டு லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையின் பல்வேறு பகுதிகளில் இரவு முழுவதும் விட்டுவிட்டு பெய்த மழை, அதிகாலை முதல் தொடர்ந்து பரவலாக பெய்து வருகிறது. வெப்பசலனம் காரணமாக அண்ணாசாலை, நந்தம்பாக்கம், போரூர், கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், கோடம்பாக்கம், மடிப்பாக்கம், வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

இதேபோல் பூந்தமல்லி, ஆவடி, அம்பத்தூர், கோயம்பேடு, அயனாவரம், மீனம்பாக்கம், நங்கநல்லூர், சைதாப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து மிதமான மழை பெய்து வருகிறது. வெயிலின் தாக்கம் அதிகரித்துக் காணப்பட்ட நிலையில், தற்போது பெய்துவரும் மழையால் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. மதியம் வரை விட்டு விட்டு லேசானது முதல் மிதமான மழை பெய்யும் எனவும், அடுத்த சில நாட்களுக்கு இதேபோல் இரவு நேரங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close