[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பிரதமர் மோடி சீன அதிபர் ஜின்பிங் சந்திக்கவுள்ள மாமல்லபுரத்தில் சீன அதிகாரிகள் ஆய்வு
  • BREAKING-NEWS அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் மழை நீடிக்க வாய்ப்பு. 14 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் - ‌வானிலை மையம்
  • BREAKING-NEWS நீட் ஆள்மாறாட்டம் விவகாரத்தில் தேடப்பட்டு வரும் மாணவர் உதித் சூர்யா முன்ஜாமீன் மனு
  • BREAKING-NEWS சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமானியின் ராஜினாமா ஏற்பு. பொறுப்பு தலைமை நீதிபதியாக வினீத் கோத்தாரி நியமனம்.
  • BREAKING-NEWS 7 நாள் பயணமாக அமெரிக்காவுக்கு புறப்பட்டுச் சென்றார் பிரதமர் மோடி

கர்நாடகா மற்றும் கேரளாவிற்கு நடிகர்கள் சூர்யா, கார்த்தி ரூ.10 லட்சம் நிதியுதவி

surya-karthi-donate-fund-for-kerala-and-karnataka

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கர்நாடகா மற்றும் கேரளாவிற்கு நடிகர்கள் சூர்யா, கார்த்தி சார்பில் ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது.

கேரளாவில் மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 104 ஆக உயர்ந்துள்ளது. பெரும் நிலச்சரிவு ஏற்பட்ட மலப்புரம் மாவட்டத்தில், மண்ணில் புதைந்திருக்கும் 32 பேரின் உடல்களை தேடும் பணி நடை பெற்று வருகிறது. ஏற்கனவே மழை வெள்ளத்தால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 104 ஐ எட்டியிருக்கும் நிலையில், கோழிக் கோடு, கண்ணூர், மலப்புரம் ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு "ஆரஞ்ச் அலர்ட்" விடுக்கப்பட்டுள்ளது.

வெள்ளத்தால் 1 லட்சத்து 30‌ ஆயிரம் ஹெக்டேர் விளைநிலங்கள் சேதமடைந்துள்ளதாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. வீடுகளை இழந்தவர்களுக்கு ரூபாய் 4 லட்சம் இழப்பீடும், வீடு மற்றும் நிலம் இழந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடும் வழங்கப்பட உள்ளதாக கேரள அரசு அறிவித்துள்ளது. அதேபோல், கர்நாடகாவில் ஜூன் மாதம் தொடங்கிய தென்மேற்கு பருவமழை, தீவிரம் அடைந்துள்ளது. கேரளா, கர்நாடகா, மகாரஷ்டிராவில் இடைவிடாது கொட்டும் மழை, வெள்ளத்தால் ஏராளமானோர் பாதிப்படைந்துள்ளனர். 

இந்நிலையில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கர்நாடகா மற்றும் கேரளாவிற்கு நடிகர்கள் சூர்யா, கார்த்தி சார்பில் ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close