[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தேர்தல் விதிகளை மீறியதாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS இடைத்தேர்தல் தேர்தலில் நாங்குநேரி - 66.10%, விக்கிரவாண்டி - 84.36% வாக்குப்பதிவு - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ
  • BREAKING-NEWS தொடர் மழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு - ஆட்சியர்
  • BREAKING-NEWS தீபாவளிக்கு மறுநாள் அக்.28ஆம் தேதி (திங்கள் கிழமை) அரசு விடுமுறை

“என்னைப் பார்த்து ஒபிஎஸ் சிரித்ததால் முதல்வர் பதவி பறிபோனது” - ஸ்டாலின் 

stalin-speech-about-jayalalitha

ஜெயலலிதாவிடம் அரசியல் ரீதியான கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அவர் தைரியமானவர் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

வேலூர் நாடளுமன்றத்தொகுதியில் இன்று நடைபெற்ற இறுதிக்கட்டப் பரப்புரையில் திமுக தலைவர் ஸ்டாலின் அக்கட்சியின் வேட்பாளர் கதிர் ஆனந்தை ஆதரித்து உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “வெற்றி என்பது உறுதியாக்கப்பட்டிருக்கிறது. அதில் இம்மியளவும் சந்தேகம் கிடையாது. ஆனால் எவ்வளவு லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறப்போகிறோம் என்ற கேள்வியோடு களத்தில் நிற்கிறோம். 

திமுக வெற்றி பெறுவதை தடுக்கும் நோக்கில் செயல்படுத்தப்பட்டதுதான் அந்த ரெய்டு எனும் சதி. கருணாநிதியின் நிழலாக இருந்தவர் துரைமுருகன். ஒபிஎஸ் மகன் நாடாளுமன்றத்தில் ஜால்ரா தட்டுகிறார். ஒபிஎஸ் மீது மரியாதை வைத்துள்ளேன். அவர் என்னைப்பார்த்து அடிக்கடி சிரிப்பார். அதனாலேயே அவருக்கு முதலமைச்சர் பதவி பறிபோனது. 

ஆம்பூரில் பேசிய போது அப்துல்கலாம் ஒரு கசாப்புகடைக்காரர் என்று கருணாநிதி சொல்லியதாக ஒபிஎஸ் கூறியிருக்கிறார். அப்துல்கலாம் முதல் முறை ஜனாதிபதியாக போட்டியிடக்கூடிய சூழல் வந்தபோது அதை ஆதரித்து முதலில் குரல் கொடுத்தவர் கருணாநிதி. அப்படி இருக்க கருணாநிதி பேசியதாக நீங்கள் கூறிய வார்த்தையை நிரூபிக்க தயாரா? அவ்வாறு நிரூபித்தால் எந்தத் தண்டனையை பெற்றுக்கொள்ளவும் நான் தயார். இல்லையென்றால் நான் கொடுக்கும் தண்டனைக்கு நீங்கள் தயாரா? இதை நான் சவாலாகவே கேட்கிறேன். 

கருணாநிதி மற்றும் ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த வரையில் நீட் உள்ளே வர முடியவில்லை. ஜெயலலிதாவிடம் அரசியல் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அவர் தைரியமானவர். கருணாநிதிக்கு ஆறு அடி இடம் இல்லை என்று சொன்னவர்கள் தற்போதைய ஆட்சியாளர்கள். நீதிமன்றம் சென்று அதை பெற்றோம். அவர்களுக்கு மக்கள் நாடாளுமன்றத் தேர்தலில் தக்க பாடம் புகட்டியுள்ளனர்” எனப் பேசினார். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close