[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தாக்குதல் பாதிப்புகளை சமாளித்து கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரித்து வருவதாக சவுதி அரேபியா தகவல்
  • BREAKING-NEWS விண்ணில் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு பாய்ந்து தாக்கும் அஸ்திரா ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்தது இந்தியா
  • BREAKING-NEWS பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் இந்தியாவின் வசமாகும் - வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர்
  • BREAKING-NEWS தமிழகத்தில் போக்குவரத்து விதிமீறலுக்கான அபராத தொகை விரைவில் குறைக்கப்படும் - போக்குவரத்துத்துறை அமைச்சர்

“கல்லாவில் பணம் வைக்கக் கூடாதா..?” - விரக்தியில் கடிதம் எழுதிய திருடன்

cuddalore-thief-upset-with-no-money-in-shop-where-he-went-to-go-for-theft

கொள்ளையடிக்கச் சென்ற கடையில் பணம் இல்லாததால் விரக்தியடைந்த திருடன், கடை உரிமையாளருக்கு கடிதம் எழுதி வைத்துவிட்டுச் சென்ற சம்பவம் நடந்துள்ளது.

கடலூர் மாவட்டம் மந்தாரக்குப்பத்தில் ஜெயராஜ் என்பவர் மளிகைக்கடை நடத்தி வருகிறார். வழக்கம்போல் கடையைத் திறந்தபோது கொள்ளை முயற்சி நடந்திருப்பது தெரியவந்தது. அதில் சுவாரஸ்யம் என்னவென்றால், கடை உரிமையாளரை கேள்வி கேட்கும் விதமாக அந்தத் திருடன் கடிதம் எழுதி வைத்து விட்டுச் சென்றுள்ளார்.
 
மேற்கூரையை உடைத்து உள்ளே புகுந்த திருடன், கல்லாவில் பணம் இல்லாதது ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. உயிரை‌ பணயம் வைத்து கடைக்குள் திருட வந்தால், கல்லாவில் பணம் வைப்பதில்லையா என‌ அந்தத் திருடன் ஆதங்கத்துடன் கேள்வி எழுப்பியுள்ளார். 

                           

பணம் இல்லாத ஆத்திரத்தில் கடையில் உள்ள பொருள்களை சேதப்படுத்திவிட்டு, குரங்கு சேட்டை செய்திருப்பதாக கடிதத்தில் தெரிவித்துள்ளார். இதைக் கண்டு சிரிப்பதா, அழுவதா எனத் தெரியாமல் திகைத்துபோன கடை உரிமையாளர் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், திருடனைத் தேடி வருகின்றனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close