[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இந்தியாவுக்கு எதிரான டி20 போட்டி: தென்னாப்பிரிக்க அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
  • BREAKING-NEWS அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நாளை மறுநாள் நடைபெறுகிறது
  • BREAKING-NEWS தமிழகம் முழுவதும் கருணாநிதி சிலை திறக்கப்படும்: ஈரோட்டில் கருணாநிதி சிலையை திறந்து வைத்து மு.க.ஸ்டாலின் பேச்சு
  • BREAKING-NEWS இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் 25-ம் தேதி அறிவிக்கப்படுவார்கள்: சீமான்

மர்மமான முறையில் இறந்த நாய்கள் : விஷம் வைத்து கொலை ?

6-dogs-died-in-madurai-police-enquire-about-it

உசிலம்பட்டி அருகே பாதுகாப்பிற்காக மக்கள் வளர்த்த 6 நாய்கள் மர்மமான முறையில் இறந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள செக்காணூரணியை அடுத்த பன்னியான் கிராமத்தில் 120க்கும் அதிகமான குடும்பத்தினர் வசதித்து வருகின்றனர். மலை அடிவாரப் பகுதியான இந்தக் கிராமத்திற்கு அடிக்கடி வனவிலங்குள் வருவதால், பாதுகாப்பிற்காக வீடுகள் தோறும் நாய்கள் வளர்ப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். 

இந்நிலையில் நேற்று மாலை முதல் இன்று வரை ஜெயக்குமார், சிவக்குமார், பாண்டி, சஞ்சிவ், தங்கராஜ், கருத்தையா என்ற ஆறு பேரின் ஆறு நாய்கள் மர்மமான முறையில் இறந்துள்ளன. மேலும் செந்தில் மற்றும் முத்தையா என்பவர்களது 3 நாய்களை காணவில்லை. 

பாதுகாப்பிற்காக வளர்த்த நாய்களை திருடர்கள் அல்லது வேண்டாதவர்கள் விஷம் வைத்து கொலை செய்திருக்கலாம் என அவற்றின் உரிமையாளர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். இது குறித்து காவல்நிலையம் மற்றும் ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும், எந்த அதிகாரியும் நேரில் வரக்கூட இல்லை எனவும் கிராம மக்கள் குறை கூறுகின்றனர். விஷம் வைத்து கொன்ற மர்ம நபரை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close