[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தில் இன்றும் கனமழைக்கு வாய்ப்பு
  • BREAKING-NEWS நள்ளிரவில் அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்பட்டது அத்திவரதர் சிலை..!
  • BREAKING-NEWS சந்திரயான்-2 விண்கலம் செப்.7 ஆம் தேதி நிலவில் தரையிறங்குகிறது - இஸ்ரோ
  • BREAKING-NEWS கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் உபரிநீர் திறப்பு வினாடிக்கு 34,000 கன அடியாக அதிகரிப்பு
  • BREAKING-NEWS தமிழகத்தில் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு - தமிழக அரசு

கர்நாடகாவைபோல் மற்ற மாநிலங்களிலும் பாஜக வலுப்பெறும் - தமிழிசை 

tamilisai-speech-about-karnataka-assembly

கர்நாடகாவைபோல் மற்ற மாநிலங்களிலும் பாஜக வலுப்பெறும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார்.

கர்நாடக சட்டப்பேரவையில் 4 நாட்களாக நடந்த வாதத்திற்கு பின்னர் நேற்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தது. இதில் குமாரசாமி அரசுக்கு ஆதரவாக 99 வாக்குகள் மட்டுமே பதிவாகின. எதிராக 105 வாக்குகள் பதிவாகின. இதனால் பெரும்பான்மையை இழந்த மஜத-காங்கிரஸ் கூட்டணி ஆட்சி கவிழ்ந்தது.

கர்நாடகாவில் ஆட்சி கவிழ்ந்துள்ள நிலையில், பஞ்சாப், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மற்றும் யூனியன் பிரதேசமான புதுச்சேரி ஆகிய ஐந்து மாநிலங்களில்தான் தற்போது காங்கிரஸின் ஆட்சி உள்ளது. 

இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை, “கர்நாடகாவைபோல் மற்ற மாநிலங்களிலும் பாஜக வலுப்பெறும். கர்நாடகாவில் தாமரை மலர்வது மற்ற மாநிலங்களிலும் பாஜக வலுப்பெற உதவியாக இருக்கும். 

தமிழை நாங்கள்தான் காப்பாற்றுகிறோம் என ஸ்டாலின் மீண்டும் மீண்டும் கூறுவது தமிழ் தாய்க்கே பொறுக்காது. தமிழை காப்பாற்ற ஸ்டாலின் உட்பட யாரும் தேவையில்லை. அது எப்போதும் உயிர்ப்புடன் வளமுடன் இருக்கும்” என தெரிவித்தார். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close