[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றியது இந்திய அணி
  • BREAKING-NEWS வரும் 17-ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு
  • BREAKING-NEWS தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் அடுத்த மாதம் 25-ஆம் தேதி வெளியீடு: நவம்பர் 18-ஆம் தேதி வரை திருத்தங்கள் செய்யலாம்
  • BREAKING-NEWS ஈரோடு மாவட்டம் கோபி செட்டிப்பாளையத்தில் கனமழையால் வெள்ளப்பெருக்கு

பயங்கரவாத அமைப்புக்கு நிதி திரட்டியதாக நாகையில் 2 பேர் கைது

nia-arrests-2-from-tamil-nadu-for-suspected-terror-links

அன்சருல்லா என்ற பயங்கரவாத அமைப்புக்கு நிதி திரட்டியதாக எழுந்த புகாரில், நாகையைச் சேர்ந்த இருவரை என்.ஐ.ஏ அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

நாகை மாவட்டம் சிக்கல் பகுதியில் உள்ள ஹசன் அலி என்பவர் வீட்டில், என்.ஐ.ஏ அதிகாரிகள் நேற்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அதேபோல் மஞ்சக்கொல்லை பகுதியில் உள்ள ஆரிஸ் முகமது வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. அதில், செல்ஃபோன் மற்றும் சிம்கார்டுகள், லேப்டாப், கணினி ஹார்ட் டிஸ்குகள், சிடிக்கள் என பல முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 

சோதனைக்குப்பின் இருவரையும் நாகை எஸ்.பி அலுவலகத்திற்கு அழைத்துச் சென்ற அதிகாரிகள், அங்கு நள்ளிரவு வரை விசாரணை நடத்தினர். பின்னர் கைது செய்யப்பட்ட இருவரும் வாகனம் மூலமாக சென்னை அழைத்துவரப்படுகின்றனர். இவர்கள் அன்சருல்லா என்ற பயங்கரவாத அமைப்புக்கு நிதி திரட்டியதாகவும், பயங்கரவாத அமைப்புகளின் உதவியுடன் இந்தியாவில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் மீது சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பல பிரிவுகளில் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

ஆயுதம் ஏந்திய போலீஸ் பாதுகாப்போடு அழைத்துவரப்படும் அவர்கள், மாலை 4 மணியளவில் சென்னை வந்தடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இருவரையும் சென்னையில் உள்ள என்.ஐ.ஏ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close