[X] Close
JUST IN
  • BREAKING-NEWS அடுத்த 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் - இந்திய வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சென்னையில் சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதி
  • BREAKING-NEWS சென்னையில் பள்ளிகள் வழக்கம்போல இயங்கும் : மாவட்ட ஆட்சியர்

காலையில் படிப்பு.. மாலையில் பிராணிகள் பாதுகாப்பு - அசத்தும் சென்னை மாணவர் 

meet-the-teen-activist-who-is-building-one-of-chennai-s-biggest-animal-shelters

சென்னையிலேயே மிகப்பெரிய விலங்குகளுக்கான பாதுகாப்பு இல்லத்தை 18 வயது மதிக்க தக்க மாணவர் ஒருவர் கட்டி வருகிறார்.

சென்னை சேர்ந்தவர் சாய் விக்னேஷ். இவர் தனது குழந்தை பருவம் முதல் விலங்குகள் மீது அதிக ஈர்ப்பு உடையவர். தனது சிறுவயதில் வீட்டில் இருந்த நாய் மீது அதிக அன்பு வைத்திருந்தார். அந்த நாய் இறந்தவுடன் அவர் தெருவிலுள்ள நாய்களுக்கு உணவு வழங்க ஆரம்பித்துள்ளார். இதனையடுத்து அவருக்கு இது போன்று தெருவிலுள்ள நாய்களுக்கு தடுப்பு ஊசி அளிக்க வேண்டும் என்ற எண்ணம் எழுந்துள்ளது.  

இதனைத் தொடர்ந்து கடந்த 2015ஆம் ஆண்டு முதல் விக்னேஷ் நாய்கள் மற்ற சில விலங்குகளை காப்பாற்றி அவற்றுக்கு தேவையான உதவிகளை செய்து வருகிறார். இதற்காக 2017ஆம் ஆண்டு ‘ஆல்மைட்டி அனிமல் கேர்’ என்ற அமைப்பை ஆரம்பித்தார்.  இந்த அமைப்பின் மூலம் தற்போது வரை நாய்கள், பூனைகள்,பசுக்கள், பறவைகள் உள்ளிட்ட 300 விலங்குகளை காப்பாற்றியுள்ளார். அத்துடன் தனது வீட்டில் 15 நாய்களை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். 

இந்நிலையில் ‘யுவர்ஸ்டோரி’ என்ற தளத்திற்கு இவர் பேட்டியளித்துள்ளார். அதில், “சிறுவயதில் இருந்தே எனக்கு விலங்குகள் மீது அதிக ஆர்வம் இருந்தது. எனவே அவற்றை பராமரிக்க ஆரம்பித்தேன். மேலும் இதற்காக ஒரு அமைப்பையும் உருவாக்கி செயல்பட தொடங்கினேன். என்னுடன் சில நண்பர்களும் இந்தச் செயலில் ஈடுபட்டனர். 

அத்துடன் எனக்கு ஒரு வருடமாக ஒரு பெரிய விலங்குகளுக்கான பாதுகாப்பு இல்லம் அமைக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்து வந்தது. எனினும் இந்த விவகாரத்தில் உரிய பயிற்சி இல்லாமல் இறங்க முடியாது என நினைத்தேன். ஆகவே கடந்த ஒரு வருடமாக நான் விலங்குகளை காப்பாற்றி பாதுகாக்க ஆரம்பித்தேன். 

இதனையடுத்து மார்ச் மாதம் முதல் 2 ஏக்கர் பரப்பளவில் விலங்குகளுக்கான ஒரு பாதுகாப்பு இல்லம் அமைக்க ஆரம்பித்தேன். இந்தப் பாதுகாப்பு இடத்தில் ஒவ்வொரு விலங்குகளுக்கும் ஏற்ப தனியாக ஒரு இடம் அமைக்கப்படும். அத்துடன் விலங்குகளுக்கு தேவையான மருந்துகள் ஆகியவை இங்கு கிடைக்கும்” எனத் தெரிவித்துள்ளார். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close