[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி ஏற்றம்
  • BREAKING-NEWS தூத்துக்குடியில் கனிமொழி பெற்ற வெற்றிக்கு எதிரான வழக்கை வாபஸ் பெறுவதாக உயர்நீதிமன்றத்தில் தமிழிசை தரப்பில் மனு தாக்கல்
  • BREAKING-NEWS தமிழகத்தில் இன்றும் மழை தொடரும் என வானிலை மையம் அறிவிப்பு
  • BREAKING-NEWS இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக விருப்பமனு அளித்தவர்களிடம் இன்று நேர்காணல் நடத்துகிறது அதிமுக
  • BREAKING-NEWS நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் இன்று தொடங்குகிறது

திமுக பிரமுகர் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு

petrol-bomb-blast-on-dmk-cadre-house

புதுக்கோட்டையில் திமுக பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மச்சுவாடி அருகே உள்ள பாலாஜி நகரை சேர்ந்தவர் அருண் ஸ்டாலின் (35). இவர் திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளராக உள்ளார். இவர் நேற்று இரவு 10.30 மணி அளவில் தனது பணிகளை முடித்துவிட்டு வீட்டிற்கு திரும்பியிருக்கிறார். அப்போது அந்த பகுதியில் மின்தடை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

செல்போன் டவரில் ஏறிய நபர்.. லாவகமாக பேசி தற்கொலை எண்ணத்தை மாற்றிய எம்எல்ஏ..!   

அந்த நேரத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் சிலர், அருண் ஸ்டாலின் வீட்டின்  நுழைவு வாயில் மற்றும் காம்பவுண்டு சுவர் மீது 2 பெட்ரோல் குண்டை வீசிவிட்டு தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து பலத்த சத்தம் கேட்டதால் அருண் ஸ்டாலின் வீட்டிற்கு வெளியே வந்து பார்த்தபோது சுவர் மீது தீப்பற்றி எரிந்து உள்ளது. அருகே பாட்டில்களில் உள்ள கண்ணாடிகள் சிதறி கிடந்துள்ளன.

இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அருண் ஸ்டாலின் உடனடியாக அருகில் இருந்த தண்ணீரை ஊற்றி தீயை அணைத்துள்ளார். அத்துடன் இதுகுறித்து போலீசாருக்கும் தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்து புதுக்கோட்டை கணேஷ் நகர் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close