[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தில் இன்றும் கனமழைக்கு வாய்ப்பு
  • BREAKING-NEWS நள்ளிரவில் அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்பட்டது அத்திவரதர் சிலை..!
  • BREAKING-NEWS சந்திரயான்-2 விண்கலம் செப்.7 ஆம் தேதி நிலவில் தரையிறங்குகிறது - இஸ்ரோ
  • BREAKING-NEWS கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் உபரிநீர் திறப்பு வினாடிக்கு 34,000 கன அடியாக அதிகரிப்பு
  • BREAKING-NEWS தமிழகத்தில் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு - தமிழக அரசு

“மழை பெய்யாததே பிரச்னைக்கு காரணம்”- முதலமைச்சர் பழனிசாமி

cm-palanisamy-press-meet

மழை பெய்யாததால்தான் நிலத்தடி நீர் மட்டதை உயர்த்த முடியவில்லை என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சென்னையில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம் நெம்மேலியில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தின் 2 ஆவது ஆலைக்கான கட்டுமானப் பணிகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டினார். இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் பழனிசாமி, “  நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் 2-வது ஆலை பணி, 2021-ல் முடிக்கப்பட்டு நீர் விநியோகிக்கப்படும்.பேரூரில் தினமும் 400 மில்லியன் லிட்டர் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தையும் செயல்படுத்த அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இதுமட்டுமில்லாமல், வறட்சி பாதித்த பிற கடலோர மாவட்டங்களிலும் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை செயல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது.

மழை பெய்யாததே அனைத்து பிரச்னைகளுக்கும் காரணம். மழை பெய்தால்தான் நிலத்தடி நீர் மட்டம் உயரும். ஜோலார்பேட்டையிலிருந்து சென்னைக்கு ரயிலில் குடிநீர் கொண்டு வரும் திட்டம் 2 வாரத்தில் செயல்படுத்தப்பட உள்ளது. தொழிற்சாலைகள் பயன்படுத்தும் நீரை சுத்தகரித்து மீண்டும் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தை பாதிக்கும் எந்த திட்டத்தையும் தமிழக அரசு ஏற்றுக் கொள்ளாது. தமிழகத்திற்கு சாதமான திட்டங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்” என தெரிவித்தார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close