[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்குகிறது
  • BREAKING-NEWS டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்படுகிறார் ப.சிதம்பரம். காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ அதிகாரிகள் நடவடிக்கை
  • BREAKING-NEWS அமலாக்கத்துறை, சிபிஐ மூலம் ப.சிதம்பரத்தின் நற்பெயரை கெடுக்க மோடி அரசு முயற்சிக்கிறது - ராகுல் காந்தி

மதுரையில் எய்ம்ஸ்: ஜப்பான் குழு ஆய்வு 

the-state-government-has-hand-over-the-land-to-the-aiims-hospital-in-madurai

தமிழகத்தில் எய்ம்ஸ் அமையவுள்ள மதுரை தோப்பூரில் ஜப்பான் நிதிக்குழு மற்றும் மத்திய நிதிக்குழுவினர் ஆய்வு நடத்தினர்.

ஜப்பான் நிதியுதவியுடன் மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ளது. இதற்காக ஜப்பான் நிதிக் குழு மற்றும் மத்திய, மாநில அரசு அதிகாரிகள் கொண்ட குழு தோப்பூரில் மருத்துவமனை அமைய இருக்கும் இடத்தில் ஆய்வு நடத்தியது. எவ்வளவு நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது, போக்குவரத்து வசதிகள் ஏற்படுத்த முடியுமா என்பவை குறித்து ஜப்பான் குழுவிடம் அதிகாரிகள் விளக்கினர். ஆய்வு முடிந்த நிலையில் ஜப்பான்‌ குழு ஆலோசனை நடத்தி இதற்‌கான நிதியை ஒதுக்கவுள்ளது. நிதி ஒதுக்கப்பட்ட உடன் கட்டுமானப் பணிகள் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Image result for aiims madurai

மேலும் 4 வருடங்களில் பல கட்டங்களாக எய்ம்ஸ் மருத்துவமனை கட்டி‌ முடிக்‌கப்படும் எனத் தெரிவித்துள்ள அதிகாரிகள், தற்போதைக்கு சுற்றுசுவர் கட்ட 15 கோடி ரூபாய் ஒதுக்கி ஒப்பந்தம் தரப்பட்டுள்ளதாகவும் 3 மாதங்களில் அந்தப் பணி நிறைவடையும் என்றும் கூறியுள்ளனர். எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாநில அரசு நிலம் ஒப்படைக்கவில்லை என தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு மத்திய அ‌ரசு பதில் அளித்திருந்தது. இதுதொடர்பான செய்தி புதிய தலைமுறையில் ஒளிபரப்பானது. இதனையடுத்து 220 ஏக்கர் நிலத்தை ஒப்படைத்திருப்பதாக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம் அளித்திருந்தார். இந்தச் சூழலில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும்‌ இடத்தில் ஆய்வு நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close