[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தென்னாப்ரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சதமடித்தார் ரோகித் ஷர்மா
  • BREAKING-NEWS காங்கிரஸ் அரசு முடக்கி வைத்திருந்த தேஜாஸ் போர் விமானம் பாதுகாப்பு படையில் சேவையாற்ற தயாராக உள்ளது - பிரதமர் மோடி
  • BREAKING-NEWS நாங்குநேரியில் பணப்பட்டுவாடா செய்ததாக இதுவரை 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன - நெல்லை ஆட்சியர்
  • BREAKING-NEWS தமிழகம், புதுச்சேரியில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS திருச்சி பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளையடித்த நகைகளை முருகன் கும்பல் உருக்கி விற்றது அம்பலம்

பைக் மீது தனியார் பேருந்து மோதி விபத்து: பெண் காவலர் உட்பட 4 பேர் உயிரிழப்பு

speeding-private-bus-rams-bike-5-killed

மதுரையில் தனியார் பேருந்து மோதியதில் பெண் போக்குவரத்து காவலர் உட்பட4  பேர் உயிரிழந்துள்ளனர்.

திருமங்கலத்தில் இருந்து சென்னைக்குத் தனியார் பேருந்து ஒன்று நேற்று இரவு சென்றுகொண்டிருந்தது. மதுரை ஆண்டாள்புரம் மேம்பால இறக்கத்தில் வந்தபோது, முன்னால் சென்றுகொண்டிருந்த இருசக்கர வாகனங்கள் மீது பயங்கரமாக மோதியது. இதில் இருசக்கர வாகனத்தில் சென்ற தல்லாகுளம் போக்குவரத்து காவலர் ஜோதி மற்றும் அவரது உறவினர் சத்தியவாணி, மற்றும் சூரியகலா ஆகியோர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். 

பேருந்து, மேலும் கட்டுப்பாட்டை இழந்து, சாலையின் மறுபுறம் நுழைந்து அங்கு நின்று கொண்டிருந்த மற்றொரு இருச்சக்கர வாகனத்தின் மீதும் மோதியது. இதில் ஆனந்தன் என்பவர் உயிரிழந்தார். படுகாயமடைந்த விக்கி என்பவர் அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 

விபத்து தொடர்பாக பேருந்து ஓட்டுநரை கைது செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close