[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ‘பிகில்’ சிறப்புக் காட்சிக்கு அனுமதி கேட்டு தமிழக அரசுக்கு கடிதம்
  • BREAKING-NEWS தமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு ஒப்புதல்
  • BREAKING-NEWS சென்னையில் பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக காவல் ஆய்வாளர் கைது
  • BREAKING-NEWS தீபாவளிக்காக சென்னையில் 24 மணி நேரமும் மாநகரப் பேருந்துகள் இயங்கும் : போக்குவரத்து துறை
  • BREAKING-NEWS தீபாவளி அன்று தமிழகத்தில் பட்டாசு வெடிக்க காலை ஒரு மணி நேரம், மாலை ஒரு மணி நேரம் அரசு அனுமதி
  • BREAKING-NEWS பிசிசிஐ தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார் சவுரவ் கங்குலி
  • BREAKING-NEWS ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் ஜாமீன் கேட்டு ப.சிதம்பரம் மனு

இயற்கை முறையில் ஆட்டோவில் ஒரு குளுகுளு பயணம் 

auto-with-innovative-initiatives-in-trichy

கொளுத்தும் வெயிலுக்கு ஆட்டோவில் குளுகுளு உல்லாசப் பயணம் செய்ய வித்திட்டுள்ளார் திருச்சியைச் சேர்ந்த ஆட்டோ ஒட்டுநர் ஒருவர்.

ஆட்டோக்கள் என்றாலே வண்ண வண்ண ஸ்டிக்கர்கள், சினிமா பட ஸ்டில்கள், திரை சீலைகள், டேப் ரெகார்டர், எப்எம்.ரேடியோ, மின்விசிறி என்று பயணிகளை கவர்வதற்காக ஆட்டோ ஓட்டிகள் பல்வேறு உத்திகளை கையாண்டு வருவர். இதையெல்லாம் தாண்டி புதிதாகவும், இயற்கை முறையிலும் தன்னுடைய ஆட்டோவில் தென்னங்கீற்றுகளை பொருத்தி மக்களிடையே வரவேற்பை பெற்று வருகிறார் ஆட்டோ ஓட்டுனர் சைமன் ராஜ்.


திருச்சி மாவட்டம் கே.சாத்தனூரை சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் சைமன் ராஜ். இவர் கடந்த ஒரு வருடமாக ஆட்டோ ஓட்டி வருகிறார். இது குறித்து, அவர்,“வெயிலை தணிப்பதற்காக தென்னங்கீற்றுகளை வாங்கி வந்து ஆட்டோவின் மேற்கூரையில்  சொருகினேன். குளிர்ச்சியாக இருக்கவேண்டும் என்பதற்காக அவ்வப்போது பாட்டிலில் தண்ணீரை வைத்து ஸ்பிரே செய்வேன்.
 இதனால் ஆட்டோவில் செல்லும் பொழுது வெப்பக்காற்றுக்குப் பதிலாக, இதமான குளிர்ந்த காற்று வீசுகிறது.
 எனவே பயணிகளுக்கும் என்னுடைய ஆட்டோ பிடித்து விட்டது.

சில பயணிகள் இதேபோல் மற்ற ஆட்டோக்களிலும் இருந்தால் நன்றாக இருக்குமே என்று என்னிடம் கூறுகின்றனர். ஒரு சிலர் என்னுடைய ஆட்டோவிற்கு மீண்டும் பயணம் செய்ய வேண்டும் என்று விரும்புகிறார்கள். வெகுதூரம் பயணம் செய்ய விரும்பும் பயணிகள் என்னுடைய ஆட்டோவை தேடி வந்து புக் செய்வது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது” எனத் தெரிவித்தார்.

 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close