[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பல வாக்குச்சாவடிகளில் அமமுகவுக்கான வாக்குகள் ‘பூஜ்யம்’ என காட்டியுள்ளது; எங்கள் முகவர்கள் போட்ட ஓட்டு எங்கே? - டிடிவி தினகரன்
  • BREAKING-NEWS சென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை 8 காசுகள் உயர்ந்து ரூ.70.45க்கு விற்பனையாகிறது
  • BREAKING-NEWS சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 14 காசுகள் உயர்ந்து ரூ.74.39க்கு விற்பனையாகிறது

பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை கடத்தல்..!

infant-kidnapped-in-pollachi-government-hospital

பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில், பிறந்து 6 நாட்களே ஆன ஆண் குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொள்ளாச்சியை அடுத்த காளியாபுரம் அருகேயுள்ள நரிகள் பதி கிராமத்தைச் சேர்ந்த தம்பதி பாலன் மற்றும் தேவி. இத்தம்பதிக்கு ஏற்கெனவே இரு குழந்தைகள் உள்ள நிலையில், கர்ப்பம் தரித்த தேவி பிரசவத்துக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு திங்கள்கிழமை ஆண் குழந்தை பிறந்தது. தேவியுடன் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்ட பெண் ஒருவர், பிறந்த குழந்தையை கவனித்து வந்துள்ளார்.

இந்நிலையில் தேவி இன்று மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தார். வரும்போது குழந்தையை தூக்கிக்கொண்டு உடன் வந்த அந்தப் பெண், திடீரென தலைமறைவாகிவிட்டார். நீண்டநேரம் தேடியும் அப்பெண்ணை கண்டுபிடிக்க முடியாததால், தலைமை மருத்துவர் கலைவாணி அளித்த புகாரின் பேரில், பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மருத்துவமனையிலிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, குறிப்பிட்ட அந்த பெண் குழந்தையை தூக்கிச் செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தது தெரியவந்துள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close