[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இலங்கை அரசால் தேடப்பட்டு வந்த மதகுரு ஹஸிம் ஓட்டலில் நடந்த குண்டுவெடிப்பில் உயிரிழந்தார் - இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன
  • BREAKING-NEWS ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை - அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் உத்தரவு
  • BREAKING-NEWS வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வுமண்டலமாக வலுப்பெற்றது - கிழக்கு இந்திய பெருங்கடல்- தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலவுகிறது
  • BREAKING-NEWS சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு சிறப்பு அதிகாரியாக பொன்.மாணிக்கவேல் நியமிக்கப்பட்டதற்கு எதிராக காவல்துறை அதிகாரிகள் 66 பேர் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 75.79 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 70.34 காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் விலையில் மாற்றமின்றி, டீசல் விலை 8 காசுகள் அதிகரித்து விற்பனை
  • BREAKING-NEWS சென்னை எம்ஜிஆர் சென்ட்ரல் ரயில் நிலையம், எழும்பூர் ரயில் நிலையத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை- பயணிகள் மற்றும் அவர்களது உடைமைகளும் தீவிர சோதனை

“அதிமுக கூட்டணி தர்மத்தை புதைத்துவிட்டது” - மு.க.ஸ்டாலின்

admk-alliance-was-not-honesty-dmk-leader-stalin

கூட்டணி தர்மத்தை புதைத்துவிட்டு பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்துள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

புதுச்சேரியில் நடைபெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில், தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் வேங்கடேசன், புதுவை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் வைத்திலிங்கம் ஆகியோரை ஆதரித்து ஸ்டாலின் வாக்குச்சேகரித்தார். பரப்புரைக் கூட்டத்தில் பேசி‌ய ஸ்டாலின், புதுச்சேரியை தமிழகத்தோடு இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்த கூட்டம்தான், தற்போது புதுச்சேரியைக் காப்பாற்றுவதற்கு கூட்டணி அமைத்திருக்கிறது என்றார். 

தந்தைப் பெரியாரையும், மறைந்த முதலமைச்சர் கருணாநிதியையும் இணைத்த ஊர் புதுச்சேரி என ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்தார். கூட்டணி தர்மத்தை புதைத்து அதிமுக பொருந்தாத கூட்டணியை அமைத்திருப்பதாக விமர்சித்தார். மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கிடைக்கும் என்பது உறுதியாகி விட்டதாக அவர் கூறினார். விளைவுகளைப் பற்றி சிந்திக்காமல் செயல்படும் ஆளுநர் கிரண்பேடியை எதிர்த்து முதலமைச்சர் நாராணசாமி மக்கள் நலனுக்காக போராடி வருகிறார் எனவும் தெரிவித்தார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close