[X] Close
JUST IN
  • BREAKING-NEWS புரோ‌ கபடி லீக் தொடரில் பெங்கால் ‌வாரியர்ஸ் அணி ‌முதல் முறையாக சாம்பியன்‌. இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.
  • BREAKING-NEWS தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட்டில் ரோகித் சர்மா அசத்தல் சதம். போதிய வெளிச்சமின்மை காரணமாக முன்கூட்டியே முடிவுக்கு வந்தது முதல்நாள் ஆட்டம்
  • BREAKING-NEWS இடைத்தேர்தல் நடைபெறும் மூன்று தொகுதிகளிலும் பரப்புரை ஓய்ந்தது. வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் தீவிரம்
  • BREAKING-NEWS தமிழகம், புதுச்சேரியில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்

“சிறுபான்மையினருக்கு அதிமுக அரசு அரணாக திகழ்கிறது” - முதலமைச்சர் பழனிசாமி

admk-government-like-a-safe-guard-for-muslim-and-christians-cm-palanisamy

அதிமுக அரசு தமிழகத்தில் உள்ள சிறுபான்மையின மக்களுக்கு பாதுகாப்பு அரணாகத் திகழ்வதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணிக்கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, தமிழகம் முழுவதும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பரப்புரை மேற்கொண்டு வருகிறார். நெல்லை மக்களவைத் தொகுதியில் களமிறங்கியுள்ள அதிமுக வேட்பாளர் மனோஜ் பாண்டியனுக்கு ஆதரவாக, தொகுதிக்குட்பட்ட வள்ளியூர், நெல்லை, மேலப்பாளையம், அம்பாசமுத்திரம், ஆலங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் அவர் வாக்கு சேகரித்தார். திறந்தவெளி வாகனத்தில் நின்றவாறே பேசிய எடப்பாடி பழனிசாமி, தமிழகம் சாதி மதச் சண்டைகள் இன்றி அமைதிப் பூங்காவாகத் திகழ்வதாகக் கூறினார்.

நெல்லையைத் தொடர்ந்து, தென்காசி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் கூட்டணிக் கட்சியான புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமியை ஆதரித்து அவர் பரப்புரையில் ஈடுபட்டார். கடையநல்லூர், புளியங்குடி, சங்கரன்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்தார். பின்னர் விருதுநகர் மக்களவைத் தொகுதி தேமுதிக வேட்பாளர் அழகர்சாமி, சாத்தூர் சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் ஆகியோரை ஆதரித்து பரப்புரை செய்த எடப்பாடி பழனிசாமி, பட்டாசுத் தொழிலைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகக் கூறினார். அத்துடன் அதிமுக அரசு தமிழகத்தில் உள்ள சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு அரணாக திகழ்வதாகவும் கூறினார்.
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close