[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கர்நாடகா: இன்று மாலை 6 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கோரிய வழக்கு நாளைக்கு ஒத்திவைப்பு
  • BREAKING-NEWS தமிழகத்தில் பரவலாக 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சூரியனை ஆய்வு செய்ய அடுத்த ஆண்டு ஆதித்யா விண்கலம் அனுப்பப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்
  • BREAKING-NEWS கர்நாடகாவில் திறந்து விடப்பட்ட காவிரி நீர் மேட்டூர் அணையை வந்தடைந்தது

பொள்ளாச்சியில் ஒரு கிலோ தங்கம் பறிமுதல்

1-kg-gold-seized-from-pollachi

பொள்ளாச்சி மக்களவைத் தொகுதியில் 1 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக வருமானவரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ராஜவீதி பகுதியில் தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர் . அப்போது அவ்வழியாக வந்த காரை பரிசோதனை செய்தபோது 1 கிலோ அளவிலான தங்க நகைகள் இருந்தது தெரியவந்தது. காரில் வந்தவர்களிடம்  விசாரணை நடத்தியபோது தனியாருக்கு சொந்தமான நகைக்கடை ஒன்றிற்கான நகை எனத் தெரியவந்தது.

இதனையடுத்து கார் ஒட்டுனர் வீரய்யன் மற்றும் கடை ஊழியர் நித்தின் ஆகியோரை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வருவாய் கோட்டாச்சியர் அலுவலகத்திற்கு அழைத்து சென்றனர். அப்போது நகை செய்யும் இடத்திலிருந்து நகைகளை கொண்டு செல்வதாக அவர்கள் தெரிவித்தனர். ஆனால் உரிய ஆவணங்கள் இல்லாததால் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. அதன்பின்னர் இதுகுறித்து வருமானவரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேரில் வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close