[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சியாச்சினில் கண்காணிப்பு கோபுரத்தில் இருந்து தவறி விழுந்து தமிழகத்தை சேர்ந்த ராணுவ வீரர் பால்பாண்டி உயிரிழப்பு
  • BREAKING-NEWS ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம், சூலூர் சட்டப்பேரவை தொகுதிகளுக்கு தேர்தல் நடத்த தயார் - சத்யபிரதா சாஹூ
  • BREAKING-NEWS நூறு நாள் வேலைதிட்டத்தை 200 நாட்களாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் - அதிமுக கூட்டணியில் போட்டியிடும் புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி.சண்முகத்திற்கு ஆதரவாக முதல்வர் பழனிசாமி பரப்புரை
  • BREAKING-NEWS மணல் கடத்தலுக்கு உதவிய எத்தனை அதிகாரிகள் மீது குண்டாஸ் போடப்பட்டுள்ளது? - உயர்நீதிமன்ற கிளை
  • BREAKING-NEWS திருச்சியில் வரும் 25ல் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளேன்; தேர்தல் பரப்புரைக்காக ராகுல் காந்தி விரைவில் தமிழகம் வருவார் - திருநாவுக்கரசர்
  • BREAKING-NEWS லோக்பால் அமைப்பின் முதல் தலைவராக முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி பினாகி சந்திரகோஷ் பதவியேற்றார்
  • BREAKING-NEWS தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் 27ம் தேதி முதல் தேர்தல் பரப்புரையை தொடங்குகிறார்

பெண்களுக்கான பாதுகாப்பு : அறிந்துகொள்ளுங்கள் ‘ஐபிசி 100’

pollachi-sexual-harassment-what-said-section-ipc-100

பொள்ளாச்சி பாலியல் கொடூர சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ள நிலையில், பெண்கள் தங்களை தற்காத்துக் கொள்ள இந்திய தண்டனை சட்டம் 100வது பிரிவு வழிவகுக்கிறது. 

எவ்வளவு தான் விழிப்புணர்வு மக்களிடத்தில் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும் பெண்கள் மீதான பாலியல் அத்துமீறல்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் இருக்கின்றன. இந்நிலையில் பாலியல் கொடூரர்களிடமிருந்து காத்துக்கொள்ள அறிவுரைகள் மட்டுமே வழங்கப்பட்டு வரும் நிலையில், இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள தற்காப்பு உரிமைகள் குறித்த விழிப்புணர்வுகளே தற்போது அவசியமாகியுள்ளது. இந்திய தண்டனைச் சட்டத்தில் பிரிவுகள் 96 முதல் 106 வரை தற்காப்பு உரிமைகள் விளக்கப்பட்டுள்ளன. 

இதில் குறிப்பாக பிரிவு 100ல் எதி‌ர்தரப்பினர் நம்‌ உடன்பாடு‌ இன்றி நம்மை சீண்டும் போது தற்காப்பு உரிமை எவ்வாறு செயல்படும் என்பது குறித்து விரிவாக விளக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஒருவர் நம்மை தாக்கி கொலை செய்ய முயற்சிக்கும் போதும், நமது உடலில் கொடுங்காயங்கள் ஏற்படும் சூழ்நிலையிலும், பாலியல் ரீதியாக தாக்கும் போதும், இயற்கைக்கு மாறான முறையில் நம்மிடம் இச்சையை தீர்த்துக் கொள்ளும் நோக்கில் சீண்டும் போதும், கடத்திச் செல்லும் நோக்கில் செயல்படும் போதும், கடத்தப்பட்ட நிலையில் சட்டப்பூர்வ அதிகாரிகளை அணுக முடியாத நிலையிலும், தற்காப்பு உரிமைகளை பயன்படுத்திக் கொள்ளலாம்.

மேலும், நம்மை‌ தற்காத்துக் கொள்ளும் போது, எதிரிக்கு எவ்விதமான அசம்பாவிதங்கள் நேர்ந்தாலும் அதனை குற்றமாக கருதப்படாது என்பன உள்ளிட்ட சில வரையறைகள் கொடுக்கப்பட்டுள்ளன. பெண்கள் தங்களை காத்துக்கொள்ள தற்காப்புக்கலைகளை கற்பதை‌ மட்டுமே ஆனைவரும் பரிந்துரைத்தும் வரும் நிலையில், இந்திய தண்டனைச் சட்டம் ஐபிசி (IPC) 100 பற்றியு‌ம் அறிந்து கொள்வது முக்கியத்துவமாகவே கருதப்படுகிறது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close