[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இனி வியாழக்கிழமை தோறும் டெங்கு ஒழிப்பு தினம் - சுகாதாரத்துறை
  • BREAKING-NEWS மழையால் புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு
  • BREAKING-NEWS பாகிஸ்தானுக்கு இனி இந்திய தண்ணீர் கிடையாது: ஹரியானா தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடி திட்டவட்டம்
  • BREAKING-NEWS உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அயோத்தி வழக்கின் விசாரணை இன்றுடன் நிறைவு
  • BREAKING-NEWS கீழடியில் 5-ம் கட்ட ஆய்வுக்காக தோண்டப்பட்ட 54 குழிகள் இன்று மூடப்படுகின்றன
  • BREAKING-NEWS டாக்டர் எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில் முதல்வர் பழனிசாமிக்கு அக்டோபர் 20ம் தேதி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது

சட்டமன்றத்தில் சட்டையைக் கிழித்துக்கொள்ள மாட்டேன் கமல்ஹாசன்

will-not-tear-shirt-in-assembly-kamal-hassan

சட்டமன்றத்தில் சட்டையைக் கிழித்துக் கொள்ள மாட்டேன் என்றும் அப்படியே கிழிந்தாலும் வேறு சட்டை மாற்றிக்கொண்டுதான் வருவேன் எனவும் கமல்ஹாசன் தெரிவித்தார்.

அடுத்த மாதத்தில் மக்களவைத் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே தமிழகத்தின் பிரதான கட்சிகளான திமுக மற்றும் அதிமுக கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையில் மும்முரமாக இறங்கியுள்ளன. அதேசமயம் வருகின்ற மக்களவைத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட மக்கள் மய்யம் தயாராக இருப்பதாக கமல்ஹாசன் தெரிவித்திருந்தார். இந்நிலையில் சென்னை ஆர்.ஏ.புரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கமல்ஹாசன், சட்டமன்றத்தில் சட்டையைக் கிழித்துக் கொள்ள மாட்டேன் என்றும் அப்படியே கிழிந்தாலும் வேறு சட்டை மாற்றிக்கொண்டுதான் வருவேன் எனவும் தெரிவித்தார்.

மேலும் பேசிய கமல்ஹாசன், “ என் வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம். யார் வேண்டுமானாலும் படித்துப் பார்க்கலாம். யாரும் அரசியலை நீக்கிவிட்டு வாழமுடியாது. நான் தாமதாக அரசியலுக்கு வந்தமைக்காக மன்னிப்பு கோருகிறேன். முதலமைச்சர் என்பவர் நாட்டை வழிநடத்தும் ஒரு அலுவலர் மட்டுமே. என்னை முழு நேர அரசியல்வாதியா? என கேட்காதீர்கள். யாராலும் முழு நேரமும் எதுவாகவும் இருக்க முடியாது. நான் முழு நேர சினிமாக்காரனாகவே இருந்ததில்லை. உங்களை கட்டமைப்பதில் இருந்தே ஒரு வலிமையான தேசத்தை கட்டமைக்க முடியும். தமிழன் என்பது தகுதியல்ல, அது விலாசம், நீங்கள் என்ன செய்தீர்கள் என்பதுதான் முக்கியம். டெல்லி இல்லாமல் ஆட்சி நடத்துவோம் என தமிழ்நாடும், தமிழ்நாடு இல்லாமல் ஆட்சி நடத்துவோம் என டெல்லியும் நினைக்கக் கூடாது” என்றார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close