[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மறைமுகத் தேர்தல் முறை மூலம் சர்வாதிகார முறையில் தேர்தல் நடத்த அரசு முயன்றுள்ளது - மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS மேயர் பதவிக்கு மறைமுகமாக தேர்தல் நடத்துவது ஜனநாயகத்திற்கு விரோதமானது - கே.எஸ்.அழகிரி
  • BREAKING-NEWS மறைமுகத் தேர்தல் என்பது சட்டத்திற்கு உட்பட்டதே; மறைமுகத் தேர்தலுக்கு அவசரச் சட்டம் பிறப்பித்தது வியூகம் என்பது அல்ல - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS எங்களுடைய செயல்பாட்டை ஏற்றுக்கொண்டு பாஜக கூட்டணிக்கு ரஜினியும், கமலும் வரலாம் - பொன்.ராதாகிருஷ்ணன்
  • BREAKING-NEWS மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர் பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடத்துவதற்கான அவசரச் சட்டத்தை பிறப்பித்தது தமிழக அரசு
  • BREAKING-NEWS இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதும், கைது செய்யபப்டுவதும் இந்தாண்டு அதிகரித்துள்ளது - வெளியுறவுத்துறை அமைச்சகம்
  • BREAKING-NEWS மகாராஷ்டிராவில் சிவசேனாவுடன் இணைந்து கூட்டணி ஆட்சி அமைப்பதற்கு சோனியா காந்தி ஒப்புதல் எனத் தகவல்

வேன் - பேருந்து மோதல்: ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி!

family-of-4-dead-following-car-crash-near-vilupuram

திண்டிவனம் அருகே, வேனும் அரசு பேருந்தும் மோதி விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தைச் சார்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 11 பேர் படுகாயமடைந்தனர்.

திண்டிவனம் அருகே உள்ள விளங்கம்பாடி என்ற இடத்தில் திருச்சியிலிருந்து சென்னை நோக்கி வேன் ஒன்று வந்துகொண்டிருந்தது. இதில் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் இருந்தனர்.

இந்த வேன், விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே விளங்கம்பாடி என்ற இடத்தில் வந்த போது, சென்னையில் இருந்து திருச்சி நோக்கி சென்ற அரசு பேருந்து மீது பயங்கரமாக மோதியது. 

இதில் வேனில் இருந்த அங்குசாமி, அவர் மனைவி லட்சுமி, அவர்கள் உறவினர்கள் உமாபதி, அவர் மனைவி விஜி ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 

வேன் மற்றும் பேருந்தில் பயணம் செய்த 2 குழந்தைகள் உள்பட 11 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள் திண்டிவனம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. திண்டிவனம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close