[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பரபரப்பான அரசியல் சூழலில் கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் நாளை மறுநாள் நடக்கிறது; காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு பாஜக பேரம் பேசுவதாக கூறப்படும் நிலையில் ஆலோசனை நடைபெறவுள்ளது
  • BREAKING-NEWS காணும் பொங்கலையொட்டி சென்னையில் நாளை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்; சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள சுற்றுலாத்தளங்களுக்கு 480 சிறப்பு பேருந்துகள் இயக்கம் - மாநகர போக்குவரத்துக்கழகம்
  • BREAKING-NEWS சேலம்-ஓமலூர் பிரதான சாலைக்கு எம்ஜிஆர் பெயர் சூட்டினார் முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS அதிமுக அரசு நீடிக்க வேண்டும் என்று திமுக எம்எல்ஏக்களே விரும்புகின்றனர் - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS சேலம் அண்ணா பூங்கா வளாகத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா மணிமண்டபத்தை திறந்துவைத்தார் முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS திருவாரூர் நாகை மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்த அனுமதி அளித்த மத்திய அரசை கண்டித்து நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோமல் கிராமத்தில் கறுப்புக் கொடி போராட்டத்தில் ஈடுபட்டதாக 30பேர் மீது திருவாரூர் தாலுகா காவல் துறையினர் வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS தமிழகத்தில் மேலும் 2 நாட்களுக்கு மூடுபனி அதிகமாக நிலவும்; தமிழகத்தில் மேகக்கூட்டங்கள் குறைவால் பனி அதிகரித்து காணப்படுகிறது - சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் பழைய நண்பர்களுடனும் கூட்டணி அமைக்க தயார் - பிரதமர் மோடி

ready-to-ally-with-old-friends-in-tamilnadu-pm-modi

தமிழகத்தில் கூட்டணிக்கான கதவுகள் திறந்தே இருக்கின்றன என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். குறிப்பாக பழைய நண்பர்களுக்காக கூட்டணிக் கதவுகள் திறந்தே இருப்பதாக அவர் கூறியுள்ளது அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, கடலூர், அரக்கோணம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பாஜக நிர்வாகிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் உரையாடினார். அப்போது தமிழகத்தில் அதிமுக, ரஜினியுடன் கூட்டணியா..? அல்லது திமுகவுடன் பாரதிய ஜனதா கூட்டணி அமைக்குமா என்ற கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதில் அளித்த பிரதமர் மோடி வெற்றிகரமான கூட்டணி அரசியலை 20 ஆண்டுகளுக்கு முன்னரே சாத்தியப்படுத்தியவர் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் என்றும், அவரது பாதையில் பாஜக செயல்படுமென்றும் கூறினார். தமிழகத்தில் கூட்டணிக்கான கதவுகள் திறந்தே இருக்கின்றன என தெரிவித்த மோடி, பழைய நண்பர்களையும் வரவேற்க பாஜக தயாராக உள்ளது என கூறினார். மேலும் தேர்தல்களில் பாஜக தனிப்பெரும்பான்மை பெற்றாலும் கூட்டணி ஆட்சியாக செயல்படுவதற்கே முன்னுரிமை அளித்து வருவதாகவும் மோடி கூறியுள்ளார்.

மேலும் பேசிய அவர், “கட்சிகளை காட்டிலும் மக்களுடன் கூட்டணி அமைக்கவே விரும்புகிறோம். 20 ஆண்டுகளுக்கு முன் அப்போதைய பிரதமர் வாஜ்பாய் நாட்டில் புதிய கூட்டணி கலாசாரத்தை ஏற்படுத்தினார். மத்திய, மாநில கட்சிகள் இணைந்து மக்கள் நலனுக்காக திறம்பட செயலாற்ற முடியும் என்பதை அவர் நிரூபித்தார்” என கூறினார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close