[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றியது இந்திய அணி
  • BREAKING-NEWS வரும் 17-ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு
  • BREAKING-NEWS தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் அடுத்த மாதம் 25-ஆம் தேதி வெளியீடு: நவம்பர் 18-ஆம் தேதி வரை திருத்தங்கள் செய்யலாம்
  • BREAKING-NEWS ஈரோடு மாவட்டம் கோபி செட்டிப்பாளையத்தில் கனமழையால் வெள்ளப்பெருக்கு

கோவை விழாவை கண்டுகளிக்க டபுள் டக்கர் பேருந்து !

double-tucker-bus-is-being-introduced-in

கோவையின் சிறப்பையும், பெருமையையும் பிரதிபலிக்கும் வகையிலான “கோவை விழா” நிகழ்ச்சியை கண்டுகளிக்க டபுள் டக்கர் பேருந்து அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

கோவை நகரின் பெருமையும் பாரம்பரியத்தையும் உலகிற்கு தெரியப்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் கோவை விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டு 11 ஆவது ஆண்டாக கோவை விழா இன்று கோலாகலமாக துவங்கி உள்ளது. இதன் துவக்க விழா கோவையில் உள்ள வ உ சி மைதானத்தில் நடைபெற்றது. இந்த துவக்க நிகழ்ச்சியில் கோவை மாநகர ஆணையாளர் விஜயகார்த்திகேயன், கோவை மாநகர காவல் துறை ஆணையாளர் சுமித் சரண் ஆகியோர் பேருந்து பயணத்தை துவக்கி வைத்து, அதில் பயணம் செய்தனர். 

மேலும் வருகிற 12 ஆம் தேதி வரை இந்த விழா நடைபெறுகிறது. அதுவரை இந்த பேருந்தில் இலவசமாக பொதுமக்கள் பயணம் செய்யலாம். கடந்த ஆண்டு பொதுமக்கள் மத்தியில் இரண்டடுக்கு பேருந்து பயணம் நல்ல வரவேற்பை பெற்றதால், இந்த ஆண்டு இரண்டு பேருந்துகள் கொண்டு வரப்பட்டு உள்ளது. பொதுமக்கள் ஆர்வமுடன் இதில் பயணித்து வருகின்றனர். 

மேலும் பல்வேறு பகுதிகளில் ஆங்காங்கே நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. உணவு திருவிழா, அறிவியல் தொழில்நுட்ப விழா, திரைப்பட திருவிழா என பல்வேறு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற உள்ளது. இந்த திருவிழாவின் மூலமாக கோவையின் பெருமையை உலகிற்கு எடுத்துக்காட்டும் வகையில் உள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்து உள்ளனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close