[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ‘பிகில்’ சிறப்புக் காட்சிக்கு அனுமதி கேட்டு தமிழக அரசுக்கு கடிதம்
  • BREAKING-NEWS தமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு ஒப்புதல்
  • BREAKING-NEWS சென்னையில் பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக காவல் ஆய்வாளர் கைது
  • BREAKING-NEWS தீபாவளிக்காக சென்னையில் 24 மணி நேரமும் மாநகரப் பேருந்துகள் இயங்கும் : போக்குவரத்து துறை

ராஜஸ்தான் பெண்ணுக்கு கும்பகோணத்தில் நேர்ந்த கொடூரம்.. ஆபாச வீடியோ கும்பல் கைது..!

rajasthan-women-raped-in-tamilnadu

கும்பகோணத்தில் வடமாநில இளம்பெண்ணை ஆட்டோவில் கடத்திச்சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த 4 ஆட்டோ ஓட்டுநர்களும், இதேபோல பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்து மிரட்டிய அதிர்ச்சித்தகவல் வெளியாகி உள்ளது.

ராஜஸ்தானை சொந்த ஊராக கொண்ட இளம்பெண் சுதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). டெல்லியில் வசித்து வந்த இவருக்கு சமீபத்தில் கும்பகோணத்தில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் வேலை கிடைத்துள்ளது. இதனையடுத்து பணியில் சேர்வதற்காக தமிழகம் வந்தார் சுதா. சென்னையிலிருந்து ரயில் மூலம் கும்பகோணம் சென்ற அவர் கடந்த சனிக்கிழமை இரவு நேரத்தில் கும்பகோணம் ரயில் நிலையத்தில் இறங்கியுள்ளார்.

இதனையடுத்து தங்குவதற்கான இடத்திற்கு செல்ல ரயில் நிலையம் அருகே நின்ற ஆட்டோவை வாடகைக்கு பிடித்துள்ளார். அந்த ஆட்டோக்காரர் சுற்றுப்பாதையில் செல்வதை உணர்ந்த சுதா உடனடியாக தனது நண்பர்களுக்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்டுள்ளார். இதனால் சுதாரித்துக் கொண்ட ஆட்டோ ஓட்டுநர் ஒரு இருட்டான இடம் அருகே சுதாவை இறக்கிவிட்டு வேகமாக ஆட்டோவை ஓட்டிக்கொண்டு சென்றுவிட்டார்.

இதன்பின் கையில் வைத்திருந்த டிராலியுடன் என்ன செய்வதென்று தவித்திருக்கிறார் சுதா. அந்த நேரத்தில் அங்கு பைக்கில் வந்த இரண்டு இளைஞர்கள் சுதாவை வலுக்கட்டாயமாக அங்கிருந்த இருட்டான பகுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இவர்களை தவிர கூடுதலாக இரண்டு பேர் சேர்ந்துகொண்டும் சுதாவை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் சொல்லப்படுகிறது. பின்னர் ஆடைகளை அகற்றி ஆபாசமாக வீடியோ எடுத்த அந்த அவர்கள், வெளியே சொன்னால் வாட்ஸ் அப்பில் ஆபாசக்காட்சிகளை வெளியிட்டு விடுவோம் எனக் கூறி மிரட்டியிருக்கின்றனர்.

இதனையடுத்து ஆட்டோவை பிடித்து அவர்கள் சுதாவை வழியனுப்பி வைத்துள்ளனர். அந்த நேரத்தில் அப்பெண்ணோடு பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட ஒரு இளைஞரும் ஆட்டோவில் சென்றுள்ளார். சுதாரித்த இளம்பெண் ஆட்டோவின் எண்ணை மனப்பாடம் செய்துகொண்டார். அறைக்கு சென்ற பின்னர் நடந்தவற்றை தோழிகள் மற்றும் பெற்றோரிடம் தெரிவித்தார் சுதா.

இதனையடுத்து சுதாவின் பெற்றொர்கள் உடடினயாக கும்பகோணம் வந்தனர். அத்துடன் காவல்நிலையத்திலும் புகார் அளித்ததால் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. போலீசார் ஆட்டோ எண்ணை வைத்து அவரை தேடி கண்டுபிடித்தனர். அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட கும்பகோணத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர்களான தினேஷ், வசந்த், புருஷோத், அன்பரசன் ஆகியோரை காவல்துறையினர் கைதுசெய்தனர்.

கூட்டுப்பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்ணிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர், அந்தப் பெண்ணை கும்பகோணம் நடுவர் நீதிமன்ற நீதிபதி முன் ஆஜர்படுத்திய காவல்துறையினர் அவரிடம் ரகசிய வாக்குமூலம் பெற்றனர். இந்தநிலையில் நான்கு ஆட்டோ ஓட்டுநர்கள் குறித்த அதிர்ச்சிகர உண்மைகள் வெளியாகியுள்ளன. இந்த நான்கு பேரும், ஆட்டோவில் தனியாக வரும் பெண்களை அழைத்துச்சென்று கூட்டு வன்கொடுமை செய்துள்ளது தெரியவந்துள்ளது.

பின்னர் அவர்களை வீடியோ படம் எடுத்து, வெளியே சொன்னால் சமூக வலைத்தளங்களில் வெளியிடுவோம் என மிரட்டியதும் தெரியவந்துள்ளது. இவ்வாறு பெண்களை வேட்டையாடி வந்த இந்தக் கும்பல் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி மகளிர் அமைப்புகள் போராட்டத்தை கையிலெடுத்துள்ளனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close