[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னை மாநகரத்தின் அரசியல் மற்றும் கலாசார வரலாற்றை பற்றி பல புத்தகங்களை எழுதிய புகழ்பெற்ற எழுத்தாளர் மற்றும் பத்திரிகையாளரான எஸ்.முத்தையா காலமானார்
  • BREAKING-NEWS பிரதமர் மோடி பற்றி 5 பகுதிகளை கொண்ட Modi-Journey of a Common Man என்ற வெப் சீரிஸ் தொடரை நிறுத்த ஈராஸ் நவ் நிறுவனத்துக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு
  • BREAKING-NEWS 4 தொகுதி சட்டப்பேரவை தேர்தல் பிரசாரத்தை மே 1ம் தேதி ஒட்டப்பிடாரத்தில்(தனி) தொடங்குகிறார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS ராகுல் காந்திக்கு ஆதரவாக கேரள மாநிலம் வயநாட்டின் மானந்தவாடி பகுதியில் இன்று பிரியங்கா காந்தி வதேரா வாக்கு சேகரிப்பு
  • BREAKING-NEWS பொன்னமராவதி சம்பவத்தால் அசம்பாவிதம் நிகழாமல் தடுக்க புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் இன்று டாஸ்மாக் கடைகளை மூட ஆட்சியர் உமா மகேஸ்வரி உத்தரவு
  • BREAKING-NEWS புதுக்கோட்டை மாவட்டத்தில் பொன்னமராவதி உள்பட 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் 144 தடை உத்தரவு - இருதரப்பினர் மோதலை தொடர்ந்து இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் சிவதாஸ் உத்தரவு
  • BREAKING-NEWS 4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் ஏப்ரல் 21ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விருப்பமனு பெறலாம் - அதிமுக

ஒருமனதாக நிறைவேறியது மேகதாது அணைக்கு எதிரான தீர்மானம்

tn-govt-conclusion-against-megathadu-dam-in-special-assembly-meeting

தமிழகத்தின் இசைவின்றி மேகதாது அணை கட்டக்கூடாது என தமிழக சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தில் தனித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

குடிநீர் தேவை மற்றும் மின்சார உற்பத்திக்காக காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதனை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றுவதற்காக இன்று தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டம் நடத்தப்பட்டது. இந்தக் கூட்டத்தில் மேகதாது அணை கட்டுவதற்கு எதிராக முதலமைச்சர் பழனிசாமி தனித் தீர்மானம் கொண்டு வந்தார். அதில், உச்சநீதிமன்ற தீர்ப்பை மீறி மேகதாது அணை கட்டும் பணியை கர்நாடக அரசு துவங்கவுள்ளதற்கும், அதற்கு மத்திய நீர்வளக் குழுமம் ஒப்புதல் அளித்ததற்கும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. 

அத்துடன் மத்திய நீர்வளக் குழமம் வழங்கிய அனுமதியை திரும்பப்பெற மத்திய நீர்வள ஆதார அமைச்சகம் உடனே உத்தரவிடவும் வலியுறுத்தப்பட்டது. மேலும் தமிழக அரசின் இசைவின்றி கர்நாடக அரசு காவிரி படுகை, மேகதாது அல்லது எந்த ஒரு இடத்திலும் கட்டுமானப் பணியை மேற்கொள்ளக்கூடாது என மத்திய அரசு உத்தரவிடுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. 

இந்தத் தீர்மானம் குறித்து பேசிய துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம், “மேகதாது அணை தொடர்பாக இரண்டு வழக்குகள் நிலுவையில் உள்ளது. கர்நாடக அரசு சட்டத்திற்கு புறம்பாக அணை கட்டுவது தவறு என்பதை வலியுறுத்தி தொடரப்பட்ட வழக்கு  நிலுவையில் உள்ளது. காவிரிப்படுக்கையில் எந்த அணையும் கட்டக்கூடாது என்பதுதான் எங்கள் வாதம்” என்று தெரிவித்தார். 

பின்னர் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், “தமிழக மக்களின் வாழ்வாதாரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் மேகதாது குறித்து பேச சட்டப்பேரவை கூட்டியதற்கு நன்றி. கஜா புயலின் வடு ஆறுவதற்கு முன்பே மேகதாது அணை கட்ட அனுமதி அளித்தது வருத்தமளிக்கிறது. மேகதாது அணை கட்டுவது குறித்து முன்பே உச்சநீதிமன்றத்தில் தடை பெற்றிருக்க வேண்டும். தமிழகம் முழுமையாக வஞ்சிக்கப்பட்டுள்ளது. காவிரி மேலாண்மை ஆணையத்தின் 9 பேர் கொண்ட குழுவில், மாநிலத்தின் சார்பில் உறுப்பினர் யாரும் இல்லை. இன்று வரை நிரந்தர உறுப்பினர் நியமிக்கப்படவில்லை. தமிழகம் முழுமையாக வஞ்சிக்கப்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டார்.

பின்னர் பேசிய முதலமைச்சர் பழனிசாமி, “ஒட்டுமொத்த தமிழக மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் வகையில் மேகதாது அணைக்கு எதிரான தீர்மானத்தை முன்மொழிகிறேன். மேகதாதுவில் அணை கட்டக் கூடாது என்று ஏற்கனவே தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேகதாதுவில் அணை கட்ட நீர்வள ஆணையம் அனுமதி தந்தது அனைவரையும் கொதிப்படைய வைத்துள்ளது. மத்திய நீர்வள ஆணையம் அளித்த அனுமதியை திரும்பப் பெற வேண்டும். தீர்மானத்தை அனைத்து உறுப்பினர்களும் ஒருமனதாக நிறைவேற்றித் தர வேண்டும். கர்நாடக முதல்வரை நேரில் சந்திக்க நேரம் கேட்டபோது நேரமும் தரவில்லை. காவிரி நீரையும் தரவில்லை. தமிழகத்திற்கு தண்ணீர் தர மறுத்தது கர்நாடகாவில் ஆண்ட காங்கிரஸ் கட்சி. காவிரி பிரச்னையில் மத்திய அரசு ஒருதலைபட்சமாக செயல்படுவது வருத்தம் அளிக்கிறது” என்றார். இதைத்தொடர்ந்து ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close