[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.82 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.68.26 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS டெல்லியில் கூடிய எதிர்க்கட்சித்தலைவர்கள், குடியரசுத் தலைவரை சந்திக்க முடிவு
  • BREAKING-NEWS 2019 மக்களவை தேர்தல் தொடர்பாக டெல்லியில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் தொடங்கியது
  • BREAKING-NEWS தேர்வு அறிவிப்பாணை முறையாக இல்லாததால் உடற்கல்வி சிறப்பாசிரியர் பணிக்குத் தேர்வானோர் பட்டியலை ரத்து செய்து உயர்நீதிமன்ற கிளை உத்தரவு
  • BREAKING-NEWS தமிழகத்தின் இசைவின்றி காவிரியில் அணை கட்டக்கூடாது என கர்நாடகாவுக்கு மத்திய அரசு உத்தரவிடக் கோரும் தீர்மானம் தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றம்
  • BREAKING-NEWS காவிரி பிரச்னையில் மத்திய அரசு ஒருதலைபட்சமாக செயல்படுவது வருத்தம் அளிக்கிறது - மேகதாது அணை தொடர்பான தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு
  • BREAKING-NEWS தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டத்தில், காவிரியில் கர்நாடகா மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் முன்மொழியிடப்பட்டது

காண்போரை கத்தியால் குத்திக்கொன்ற மனநலம் பாதித்தவர் : ஈரோட்டில் பரபரப்பு

police-arrested-a-psycho-killer-in-erode

ஈரோட்டில் இரண்டு பேரை கத்தியால் குத்தி கொலை செய்த மனநலம் பாதித்தவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

ஈரோடு மாவட்டம் அந்தியூரை அடுத்த ஆத்தப்பம் பாளையத்தை சேர்ந்த குமார் என்பவரை ஒரு நபர் திடீரென கத்தியால் குத்திவிட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக கிடைத்த தகவலை அடுத்து காவல்துறையினர் அங்கு சென்று விசாரணை நடத்தினர். அத்துடன் காயமடைந்த குமாரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர். 

இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் நல்லசாமி என்பவர் தான், குமாரை குத்தினால் என்பது தெரியவந்தது. இதையடுத்து நல்லசாமியை தேடிப்பிடித்த காவல்துறையினர், அவரை கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அந்தியூர் புதுப்பாளையம் பகுதியில் உள்ள கொண்ணமரத்தையன் கோவிலில் இருவரை கொலை செய்து விட்டதாக கூறியுள்ளார். சம்பவ இடத்திற்கு சென்று பார்த்த காவலர்கள், அங்கு இரண்டு கொலை செய்யப்பட்டுக் கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். அவர்களின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். 

கொலை செய்யப்பட்டவர்கள், அதே கோயிலில் பாதுகாவலராக இருந்த வடிவேல் மற்றும் அங்கு தங்கியிருந்த வியாபாரி கந்தசாமி என்பது தெரியவந்ததுள்ளது. இதைத்தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட, முதற்கட்ட விசாரணையில் நல்லசாமி மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் கொலை செய்ததற்கான காரணம் வேறு ஏதேனும் இருக்குமோ என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். காண்போரை கத்தியால் குத்தும் மனநலம் பாதித்தவர் என்ற தகவல் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close