[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாட்டின் தண்ணீர் பற்றாக்குறையை போக்க ரூ.3.5 லட்சம் கோடி செலவிட மத்திய அரசு திட்டம் - பிரதமர் மோடி
  • BREAKING-NEWS திமுக போட்ட வழக்கினால் மன உளைச்சல் ஏற்பட்டுதான் ஜெயலலிதா மரணமடைந்தார் - நாங்குநேரி தேர்தல் பரப்புரையில் முதல்வர் பழனிசாமி பேச்சு
  • BREAKING-NEWS ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுவிக்க தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும் - வைகோ
  • BREAKING-NEWS 7 பேர் விடுதலை குறித்து முதல்வர் பழனிசாமி விளக்கமளிக்க வேண்டும் - மு.க.ஸ்டாலின் ட்வீட்
  • BREAKING-NEWS ஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கு: சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
  • BREAKING-NEWS நாங்குநேரி பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. சரவணகுமார் மீது வழக்குப்பதிவு

தமிழக அரசுடனான ஜாக்டோ ஜியோ பேச்சுவார்த்தை தோல்வி

jacto-geo-no-satisfaction-with-this-government-says-jacto-geo

தமிழக அரசுடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால், நாளை இறுதிகட்ட முடிவை அறிவிக்கப் போவதாக ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, டிசம்பர் 4ஆம் தேதி வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக ஜாக்டோ ஜியோ அறிவித்தது. இதனையடுத்து, அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளை பேச்சுவார்த்தைக்கு வருமாறு தமிழக அரசு அழைப்பு விடுத்தது. 

அதன்படி, சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் ஜெயக்குமார், ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் பணியாளர் நிர்வாக சீர்திருத்தத்துறை செயலர் சொர்ணா, நிதித்துறை செயலர் சண்முகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 3 மணி நேரத்திற்கு மேலாக நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. 

            

இதுதொடர்பாக செய்தியாளரிடம் பேசிய ஜாக்டோ ஜியோ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மீனாட்சி சுந்தரம், உயர்மட்டக்குழு மூலம் ஆலோசித்து நாளை இறுதிகட்ட முடிவு அறிவிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close