[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கனமழை காரணமாக தூத்துக்குடியில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
  • BREAKING-NEWS நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஆவின் பால் டேங்கர் லாரி ஒப்பந்த உரிமையாளர்கள் அறிவிப்பு
  • BREAKING-NEWS கோயம்புத்தூர் - பொள்ளாச்சி உள்ளிட்ட 3 புதிய ரயில் சேவைகள் இன்று அறிமுகம்
  • BREAKING-NEWS இன்று முதல் 4 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவிப்பு

லாரி மீது ஆம்புலன்ஸ் மோதி 4 பேர் பரிதாப பலி!

4-dead-in-ambulance-and-lorry-collision

நின்று கொண்டிருந்த லாரி மீது ஆம்புலன்ஸ் மோதியதில் 4 பேர் பரிதாபமாக பலியாயினர்.

திருச்சி அரசு மருத்துவமனையில் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நோயாளி ஒருவர் மேல்சிகிச்சைக்காக ஆம்புலன்சில் பெங்களூரு அழைத்துச் செல்லப்பட்டார். இந்த ஆம்புலன்ஸ் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சீதாராம் மேடு பகுதியின் சென்றுகொண்டிருந்தபோது, டீசல் இல்லாமல் நின்று கொண்டிருந்த சரக்கு லாரி மீது ஆம்புலன்ஸ் வாகனம் எதிர்பாராத விதமாக மோதியது. 

இந்த விபத்தில் ஆம்புலன்சில் இருந்த பெண் உட்பட நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஆம்புலன்ஸ் ஓட்டுநர் பலத்த காயத்துடன் ஓசூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து காரணமாக ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close