தருமபுரி மாணவி உயிரிழப்புக்கு காரணமான கயவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
தருமபுரி மாவட்டத்தில் உள்ள மலைக்கிராமம் ஒன்றைச் சேர்ந்த மாணவி அருகில் உள்ள அரசுப்பள்ளி ஒன்றில் 12-ஆம் வகுப்பு படித்து வந்தார். விடுதியில் தங்கியிருந்த அவர், தீபாவளி பண்டிகைக்காக வீட்டுக்கு வந்துள்ளார். கடந்த ஐந்தாம் தேதி இயற்கை உபாதைக்காக அருகில் உள்ள காட்டுப் பகுதிக்குச் மாணவி சென்றுள்ளார். அதே ஊரைச் சேர்ந்த சதீஷ், ரமேஷ் ஆகியோர் மாணவியை பின்தொடர்ந்து சென்றதாகக் கூறப்படுகிறது.
மாணவிக்கு சகோதரன் முறை கொண்ட இருவரும் அவரை அருகில் உள்ள ஓடைக்கரைக்கு தூக்கிச் சென்றதாக சொல்லப்படுகிறது. மாணவியின் வாயில் துணியை வைத்து அடைத்த இருவரும் அவரை வன்கொடுமை செய்ய முயன்றதாக தெரிகிறது. இதில் மாணவி படுகாயம் அடைந்தார்.
இளம்பெண்ணுக்கு நடந்த கொடுமை குறித்து காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட மாணவி அரசு காப்பகத்திற்கு அனுப்பப்பட்டு, பின்னர் தருமபுரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி மாணவி உயிரிழந்தார். அதேசமயம் உரிய சிகிச்சை அளிக்காததே உயிரிழப்புக்கு காரணம் என மாணவியின் பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர்.
இந்நிலையில் தருமபுரி மாணவி உயிரிழப்புக்கு காரணமான கயவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக ட்விட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “ தருமபுரியில் 17 வயது இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிரிழந்த கொடூரச் செய்தியறிந்து துயருற்றேன். மனிதம் இப்படியெல்லாம் வக்ரம் அடைந்து வருவது பெரும்வேதனை! இதற்குக் காரணமான கயவர்களை உடனே கைது செய்ய வேண்டும்! பேய் ஆட்சி செய்தால் பிணந்தின்னும் சாத்திரங்கள் என்பது இதுதானோ?” என தெரிவித்துள்ளார்.
‘பாலியல் வன்கொடுமை நடந்தபின் வா’ புகாரளிக்க வந்த பெண்ணை திருப்பி அனுப்பிய போலீசார்
டெல்லி தொழிற்சாலை தீ விபத்து: தலைமறைவாக இருந்த உரிமையாளர் கைது
"முத்துராமலிங்க தேவர் பெயரை சூட்ட ஓபிஎஸ், ஈபிஎஸ் தடையாக உள்ளனர்" சுப்ரமணியன் சுவாமி
உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் அறிவிப்பு
கர்ப்பிணி மனைவிக்காக நாற்காலியாக மாறிய கணவர் !