[X] Close
JUST IN
  • BREAKING-NEWS எச்.ஐ.வி. ரத்தம் ஏற்றப்பட்ட சாத்தூர் பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்தது
  • BREAKING-NEWS மக்களவை தேர்தலுக்கு தயாராக இருக்க மாநில அரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு; சொந்த மாவட்டத்திலோ அல்லது 3 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே இடத்திலோ பணியாற்றும் அரசு அதிகாரிகளை பிப்ரவரி 28-ஆம் தேதிக்குள் இடமாற்றம் செய்ய உத்தரவு
  • BREAKING-NEWS வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு கடந்த 4 நாட்களில் 1 லட்சம் பேர் வருகை தந்துள்ளனர் - பூங்கா நிர்வாகம்
  • BREAKING-NEWS பத்திரிகையாளர் கொலை வழக்கில் சாமியார் குர்மீத் ராம் ரஹீமிற்கு ஆயுள் தண்டனை விதிப்பு - பஞ்ச்குலா சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு
  • BREAKING-NEWS திருச்சி: மணப்பாறை அருகே ஆவாரங்காடு ஜல்லிக்கட்டில் மாடுபிடி வீரர்கள், பார்வையாளர்கள் என 71பேர் காயம்
  • BREAKING-NEWS சென்னை வண்டலூர் பூங்காவில் காணும் பொங்கலை முன்னிட்டு 3 மணி நிலவரப்படி 40,000பேர் வருகை தந்துள்ளனர் - பூங்கா நிர்வாகம்
  • BREAKING-NEWS குஜராத்: அகமதாபாத்தில் வல்லபாய் படேல் மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் திறப்பு

பாஜகவுக்கு எதிராக அனைத்துக் கட்சியும் ஒன்றிணைய வேண்டும்: கனிமொழி கோரிக்கை!

anti-bjp-front-has-unnerved-them-kanimozhi

’பாஜகவுக்கு எதிராக, அனைத்து அரசியல் கட்சிகளும், தங்கள் வேறுபாடுகளை மறந்து ஒன்றிணைய வேண்டும்’ என்று திமுக மகளிரணி செயலாளரும் எம்.பியுமான கனிமொழி கூறியுள்ளார்.

ஆந்திர மாநில முதலமைச்சரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு பாஜகவுக்கு எதிரான கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதற்காக அவர், கடந்த சில தினங்களுக்கு முன் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்தார். இதையடுத்து கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி, ஜனதா தளம் (எஸ்) தலைவர் தேவ கவுடா ஆகியோரை சந்தித்தார். இதையடுத்து, திமுக தலைவர் ஸ்டாலினை நேற்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். 

இந்தச் சந்திப்பின்போது நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்தும், பல்வேறு பிரச்னைகள் குறித்தும் இருவரும் நீண்ட நேரம் ஆலோசனை செய்தனர். பின் செய்தியாளர்களிடம் பேசிய முக.ஸ்டாலின்,  “பாரதிய ஜனதாவை எதிர்த்து, நாடாளுமன்றத் தேர்தலுக்காக தேசிய அளவில் அமையும் கூட்டணிக்கு திமுக ஆதரவு அளிப்பதாகவும், பாரதிய ஜனதாவின் ஆட்சியை அகற்றும் முயற்சியில் சந்திரபாபு நாயுடு ஈடுபட்டுள்ளார், அதில் பல மாநில முதல்வர்கள், பல கட்சிகளின் தலைவர்கள் இணைகின்றனர். எனவே மனப்பூர்வமாக இதற்கு ஆதரவு அளிப்பதாகக் கூறியிருக்கிறேன்” என்றார். மேலும் இதுதொடர்பாக தலைவர்கள் அனைவரும் விரைவில் சந்திக்க இருப்பதாகவும் தெரிவித்தார்.

இந்நிலையில் திமுக மகளிரணி செயலாளரும் எம்.பியுமான கனிமொழி, பாஜக எதிர்ப்புக் கூட்டணிக்கான முயற்சிகள், அந்தக் கட்சியை பதற்றம் கொள்ள வைத்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.

இதுபற்றி அவர் ட்விட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு முன்னெடுத்து வரும், பிஜேபி எதிர்ப்பு கூட்டணிக்கான முயற்சிகள், பிஜேபியை பதற்றம் கொள்ள வைத்துள்ளது. இந்தியாவின் மதச்சார்பற்ற தன்மையை பாதுகாக்க வேண்டியது, காலத்தின் தேவை.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்  கூறியுள்ளதைப் போல, மதவாத பிஜேபியையும், ஊழல் அஇஅதிமுகவையும் தோற்கடித்தே தீர வேண்டும். அனைத்து அரசியல் கட்சிகளும், தங்களுக்குள் உள்ள வேறுபாடுகளை மறந்து ஒன்றிணைய வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close