[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சர்ச்சைக்குரிய ஓவர் த்ரோ ரன்கள் - மவுனம் கலைத்தது ஐசிசி
  • BREAKING-NEWS என்.எல்.சி ஊழியரை அடித்துக் கொன்ற மனைவி - விசாரணையில் அம்பலம்
  • BREAKING-NEWS எம்.எல்.ஏக்களுடன் கிரிக்கெட் விளையாடிய எடியூரப்பா - வைரலாகும் புகைப்படம்
  • BREAKING-NEWS ‘சரவணபவன்’ ராஜகோபால் தனியார் மருத்துவமனைக்கு மாற்றம்
  • BREAKING-NEWS நடு ரோட்டில் பட்டப்பகலில் ஒருவர் வெட்டிக் கொலை - தகாத உறவு காரணமா?

வீரப்பனால் நடிகர் ராஜ்குமார் கடத்தப்பட்ட வழக்கு.. 18 ஆண்டுகளுக்கு பின் இன்று தீர்ப்பு

verdict-in-rajkumar-abduction-case-today

சந்தனக் கடத்தல் வீரப்பனால், கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தப்பட்ட வழக்கில் 18 ஆண்டுகளுக்கு பிறகு கோபி நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது.

ஈரோடு மாவட்டம்‌ தாளவாடி அருகேயுள்ள தொட்டகாஜனூரில் ‌தனது பண்ணை வீட்டில் தங்கியிருந்த கன்னட நடிகர் ராஜ்குமார், கடந்த 2000-ஆம் ஆண்டு ஜூலை 30-ஆம் தேதி வீரப்பன் மற்றும் அவனது கூட்டாளிகளால் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்டார். பல கட்ட பேச்சுவார்த்தைக்கு பின்னர் 108 நாட்களுக்குப் பிறகு ராஜ்குமாரை வீரப்பன் விடுவித்தார்.

Read Also -> சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்க சிபிஐ மறுத்தது ஏன்?: தமிழக அரசு விளக்கமளிக்க உத்தரவு 

Read Also -> நிர்மலா தேவி மீதான குற்றப்பத்திரிகை.. புதிய தலைமுறைக்கு கிடைத்த பிரத்யேக தகவல்கள்..! 

இது தொடர்பான வழக்கு கோபிசெட்டிபாளையம் மூன்றாவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் கடந்த 18 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டிருந்த 14 பேரில், வீரப்பன், சேத்துக்குளி கோவிந்தன், சந்திர கவுடா ஆகியோர்‌ போலீஸாரால் என்கவுன்டர் செய்யப்பப்பட்டனர். மல்லு என்பவர் இறந்துவிட்டார்.

ரமேஷ் தலைமறைவாகியுள்ள நிலையில், எஞ்சிய 9 பேரையும் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகும்படி நீதிபதி மணி உத்தரவிட்டுள்ளார். அதன்படி கோவிந்தராஜ், அன்றில் என்கிற ஏழுமலை, செல்வம் என்கிற சத்யா, அமிர்தலிங்கம், பசுவண்ணா, நாகராஜ், புட்டுச்சாமி, கல்மண்டிராமன், மாறன் ஆகிய 9 பேரும் இன்று ஆஜராவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வழக்கில் கன்னட நடிகர் ராஜ்குமார், அவரது மனைவி பர்வதம்மாள் ஆகியோர் விசாரணைக் காலத்தின்போதே இறந்துவிட்டனர். 18 ஆண்டுகள் கழித்து, இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்படுகிறது.

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close