[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதலமைச்சர் பழனிசாமி
  • BREAKING-NEWS நாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS தொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை
  • BREAKING-NEWS தமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்
  • BREAKING-NEWS புரோ‌ கபடி லீக் தொடரில் பெங்கால் ‌வாரியர்ஸ் அணி ‌முதல் முறையாக சாம்பியன்‌. இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.

நிர்மலா தேவி மீதான குற்றப்பத்திரிகை.. புதிய தலைமுறைக்கு கிடைத்த பிரத்யேக தகவல்கள்..!

chargesheet-filed-on-nirmala-devi-full-details

கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற வழக்கில் நிர்மலா தேவி, முருகன் மற்றும் கருப்பசாமி ஆகியோர் மீது சிபிசிஐடி காவல்துறையினர் தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகை புதியதலைமுறைக்கு பிரத்யேகமாக கிடைத்துள்ளது. அதில் உள்ள விவரங்களை தெரிந்து கொள்வோம்.

மாணவிகளை நல்வழிப்படுத்த வேண்டிய பேராசிரியையே அவர்களை தவறாக வழிநடத்த முயன்றதாக எழுந்த புகார் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி உதவிப் பேராசிரியை நிர்மலா தேவி, மதுரை காமராசர் பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர் முருகன் மற்றும் ஆய்வு மாணவர் கருப்பசாமி ஆகியோரை கைது செய்தனர்.

குற்றம்சாட்டப்பட்ட 3 பேர் மீது விருதுநகர் குற்றவியல் நீதிமன்றத்தில் சிபிசிஐடி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. சிபிசிஐடி-ன் குற்றப்பத்திரிகை புதியதலைமுறைக்கு பிரத்யேகமாக கிடைத்துள்ளது. அதில், இந்த வழக்கில் முதல் குற்றவாளி நிர்மலா தேவி, இரண்டாவது குற்றவாளி முருகன் மற்றும் மூன்றாவது குற்றவாளி கருப்பசாமி என்று தெரிவிக்‌கப்பட்டுள்ளது. 3 பேர் மீதும் பாலியல் தொழில் தடுப்புச் சட்டம், பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம், தகவல் தொழில்நுட்பச் சட்டம் உள்ளிட்ட 9 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.

Read Also -> வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய அவகாசம் நீட்டிப்பு

Read Also -> வீரப்பனால் நடிகர் ராஜ்குமார் கடத்தப்பட்ட வழக்கு.. 18 ஆண்டுகளுக்கு பின் இன்று தீர்ப்பு

முருகன் மற்றும் கருப்பசாமியின் தூண்டுதலின் பேரில், தான் செய்வது குற்றம் என்பது தெரிந்தே நிர்மலா தேவி மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்றதாக குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற புத்தாக்க பயிற்சியின் போது அறிமுகமாகி, நெருங்கிய நண்பர்களான மூவரும் தங்கள் சுயலாபத்துக்காக இந்தச் செயலில் ஈடுபட்டதாக கூறப்பட்டுள்ளது.

முருகன் மற்றும் கருப்பசாமி ஆகியோர் பலமுறை கேட்டுக் கொண்டதன் பேரில் நிர்மலா தேவி தொடர்ந்து மாணவிகளை திசைதிருப்ப முயன்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட மாணவிகள் உட்பட மொத்தம் 104 பேரிடம் விசாரிக்கப்பட்டிருப்பதாகவும், ஹார்டு டிஸ்க், பென் கேமரா,‌ பென் ட்ரைவ், செல்போன், சிம் கார்டு, காசோலை, சி.டி. என மொத்தம் 154 பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. குற்றப்பத்திரிகையில் நிர்மலா தேவி, முருகன் மற்றும் கருப்பசாமி ஆகியோரை தவிர வேறு யாருக்கும் இதில் தொடர்பிருப்பதாக தெரிவிக்கப்படவில்லை.

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close