[X] Close
JUST IN
  • BREAKING-NEWS புழல் சிறையில் இருந்த எம்எல்ஏ கருணாஸ் வேலூர் சிறைக்கு மாற்றம்
  • BREAKING-NEWS எக்காரணத்தை கொண்டும் ரஃபேல் ஒப்பந்தம் ரத்து செய்யப்படாது - மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலையில் ஓய்வு பெற்ற நீதிபதி தருண் அகர்வாலா தலைமையிலான குழு ஆய்வு
  • BREAKING-NEWS 2018 ஆம் ஆண்டிற்கான சிறந்த சர்வதேச நடிகருக்கான IARA விருதுக்கு மெர்சல் படத்தில் நடித்ததற்காக விஜய் தேர்வு
  • BREAKING-NEWS முதல்வர், காவல்துறை குறித்து அவதூறாக பேசிய வழக்கில் சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் கைது
  • BREAKING-NEWS கருணாசுக்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்காதது ஏன்? - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS திமுக பஞ்சாயத்து கட்சியாக மாறிவிட்டது; ஸ்டாலின் வழக்கு தொடர்ந்தால் சந்திக்க தயார் - அமைச்சர் ஜெயக்குமார்

போலீசை மிரட்டிய ’புல்லட்’ அதிரடி கைது: விரட்டிச் சென்று பிடித்தார் டிஎஸ்பி

bullet-nagaraj-arrested

போலீசாரை வாட்ஸ் ஆப்-பில் மிரட்டி வந்த ரவுடி புல்லட் நாகராஜ் இன்று அதிரடியாக கைது செய்யப்பட்டார்.

தேனி மாவட்டம், ஜெயமங்கலம் பகுதியைச் சேர்ந்த ரவுடி புல்லட் நாகராஜ். இவர் பல்வேறு  வழக்குகள் உள்ளன. இவர், மதுரை சிறைத்துறை எஸ்பி ஊர்மிளாவுக்கு வாட்ஸ் ஆப் மூலம் கொலை மிரட்டல் விடுத்து பேசினார். ’மதுரை ஜெயிலை பொருத்தவரை உனக்கு நிர்வாகத்திற மையே கிடையாது. உன்னை மாதிரி சிறையில் கைதியை அடிச்ச ஒரே காரணத்துக்காக, ஜெயிலரை எரிச்சு கொன்றது ஞாபகமிருக்கும். பொம்ப ளையாக இருக்கீங்க, திருந்துங்க’ என்று மிரட்டியிருந்தார்.

இந்த மிரட்டல் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வந்தது. இதையடுத்து பெரியகுளம் தென்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் மதனகலா வுக்கும் கொலை மிரட்டல் விடுத்து, ‘புல்லட்’ நாகராஜ் ஆடியோ வெளியிட்டு இருந்தார். இதுவும் சமூக வலைதளங்களில் வைரலானது.

Read Also -> 5 லிட்டர் பெட்ரோல் வாங்கினால் 1 லிட்டர் இலவசம்..! 

Read Also -> எழுவர் விடுதலை.. இன்று மாலை அனுப்பப்படுகிறது பரிந்துரை கடிதம்

 இந் நிலையில், அவருடைய மற்றொரு ஆடியோ வெளியானது. அதில், ‘தேனி போலீசுக்கு ஒன்று சொல்கிறேன் கேட்டுக் கொள்ளுங்கள். நீங்கள் தான் பெரிய அறிவாளி என்று நினைத்தீர்கள் என்றால் உங்களை போல் முட்டாள் யாரும் இல்லை. பெண்களை கற்பழிப்பது நீங்கள் தான். நான் எஸ்.பி., கலெக்டரையே மாற்றிய ஆள். இப்போது வந்துள்ள கலெக்டர் பல்லவி பல்தேவ் அம்மா வந்து எதுவும் செய்யவில்லை. என் முடியை கூட உன்னால் கண்டுபிடிக்க முடியாது. நீ உலகம் முழுவதும் தேடினாலும் என்னை தொட முடியாது. நானாக விரும்பினால் தான் உன் முன்னா ல் வருவேன்’ என்று சவால் விட்டிருந்தார். இது பரபரப்பைக் கிளப்பியது. இதையடுத்து அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்நிலையில் தென்கரையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த நாகராஜை விரட்டி சென்று, பெரியகுளம் டிஎஸ்பி ஆறுமுகம்  பிடித்தார். பின்னர் அவரை கைது செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close