[X] Close
JUST IN
  • BREAKING-NEWS திமுக கூட்டணியில் காங்கிரசுக்கான தொகுதிப்பங்கீடு பற்றி அண்ணா அறிவாலயத்தில் நாளை அறிவிக்கப்படும் - டெல்லியில் கே.எஸ்.அழகிரி பேட்டி
  • BREAKING-NEWS 21 தொகுதி இடைத்தேர்தல்களிலும் அதிமுகவுக்கு பாஜக முழு ஆதரவு அளிப்பதாக தீர்மானம் - பியூஷ் கோயல், துணைமுதல்வர் ஓபிஎஸ் கூட்டாக பேட்டி
  • BREAKING-NEWS 2019 மக்களவை தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணி உறுதியானது; அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன
  • BREAKING-NEWS மக்களவை தேர்தலுக்கான திமுக-காங்கிரஸ் கூட்டணி நாளை அறிவிக்கப்படும் என காங்கிரஸ் கமிட்டியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தகவல்
  • BREAKING-NEWS திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு 10 தொகுதிகள் வழங்கப்பட வாய்ப்பிருப்பதாக தகவல்
  • BREAKING-NEWS மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன
  • BREAKING-NEWS மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நிலைப்பாட்டிற்கு எதிரான முடிவை அதிமுக எடுத்துள்ளது - அதிமுக-பாமக கூட்டணி குறித்து திருமாவளவன்

மீண்டும் பெண் குழந்தையா..? மூன்று மாத குழந்தையை கழுத்தை அறுத்துக் கொன்ற தாய் ! 

a-mother-who-killed-her-three-month-old-baby

3 மாத பெண் குழந்தையை கழுத்தறுத்துக் கொன்று குப்பையில் வீசியதாக, பெற்ற தாயே கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் கோவையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கோவை கோவை மாவட்டம் சரவணம்பட்டி அடுத்த சிவானந்தபுரத்தைச் சேர்ந்தவர்கள் கார்த்திக், வனிதா தம்பதி. இவர்களுக்கு ஏற்கெனவே ஒன்றரை வயதில் பெண் குழந்தை உள்ள நிலையில், கடந்த 3 மாதங்களுக்கு முன் 2 ஆவதாக பெண் குழந்தை பிறந்தது. கவிஸ்ரீ என பெயரிடப்பட்ட அக்குழந்தையை வனிதா வளர்த்து வந்தார். இந்நிலையில், தாம் வீட்டில் குளித்துக் கொண்டிருந்தபோது, குழந்தையை யாரோ கடத்திச் சென்றுவிட்டதாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார் அவர். ஒருபுறம் உறவினர்களும், கிராமத்தினரும் குழந்தையைத் தேடி வந்த நிலையில், காவல்துறையின் விசாரணை தொடங்கியது. 

முதற்கட்ட விசாரணையில் முரணான தகவல்களைக் கொடுத்து காவலர்களை குழப்பியுள்ளார் வனிதா. குழந்தை கடத்தப்பட்டதற்கான எவ்வித கவலையும் இன்றி இயல்பா‌க இருந்த அவர் மீது சந்தேகம் வலுக்கவே, காவலர்கள் விசாரணை தீவிரப்படுத்தினர். விசாரணை முடிவில், குழந்தையை கத்தியால் கழுத்தை அறுத்துக் கொன்றதை வனிதா ஒப்புக் கொண்டதாக காவல்துறையினர் தெரிவித்திருப்பது உறவினர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கெனவே ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில், 2ஆவது ஆண் குழந்தை பிறக்கும் என்ற எதிர்பார்ப்பில் இருந்துள்ளனர் கார்த்திக், வனிதா தம்பதி. ஆனால், 2ஆவதும் பெண் குழந்தையாக பிறந்ததால் ஏமாற்றமடைந்த வனிதா, விரக்தியில் இருந்ததாக கூறப்படுகிறது. அதீத மன உளைச்சலில் இருந்த வனிதா, குழந்தையை கொன்றுவிட்டு நாடகமாடியது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. குழந்தையின் சடலத்தை மீட்ட காவல்துறையினர், உடற்கூறாய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வனிதா மற்றும் அவரது நண்பரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close